சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: நடவடிக்கை இன்றேல் நோன்பிலும் போராட்டம்

சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

0 593

அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி சபைக்­கான கோரிக்­கையைத் தீர்த்து வைப்­ப­தாக முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், சம்­பந்­த­ப்பட்ட அமைச்­சரும் வாக்­கு­று­தி­ய­ளித்து பல மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதனால் விரைவில் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும், நோன்பு காலத்­திலும் இப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­துக்­கென தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான போராட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்து விளக்­க­ம­ளிக்­கையில், “மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீ­ஸுடன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரும்­படி கோரிக்கை விடுத்து பல மாதங்­க­ளா­கியும் எங்­க­ளது கோரிக்கை கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்தே சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டங்­க­ளையும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­க­ளையும் நடத்­த­வுள்ளோம்.

சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ளும் வரை எமது போராட்­டங்கள் தொடரும். இந்தப் போராட்­டத்தில் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள், வர்த்­த­கசங்­கத்தின் பிர­நிக­தி­நி­திகள், உலமா சபை பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், சுயேச்சைக் குழுவின் உறுப்­பி­னர்கள் என பிர­தே­சத்தைச் சேர்ந்த அனை­வரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

சாய்ந்­த­ம­ருது மக்கள் முஸ்லிம் அர­சியல் வாதி­களால் நீண்­ட­கா­ல­மாக ஏமாற்­றப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி ஏமாற்­றி­யி­ருக்­கி­றார்கள். சாய்ந்­த­ம­ருது மக்கள் தொடர்ந்தும் ஏமா­று­வ­தற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சராலும், முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் நிறைவேற்றித் தரப்படாவிட்டால் நாம் இறுதியாக ஜனாதிபதியைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.