சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு கலந்துரையாடல்

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

0 561

சாய்ந்­த­ம­ரு­துக்­கென தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யொன்று நிறு­வு­வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வரவு– செல­வுத்­திட்டம் மற்றும் புத்­தாண்டு விடு­முறை கார­ண­மா­கவே குழு ஒன்று கூடி இது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வில்லை. புத்­தாண்டு விடு­மு­றையின் பின்பு குழு ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­துக்­கென முன்­வைக்­கப்­பட்­டுள்ள தனி­யான உள்­ளூ­ராட்சி சபை கோரிக்கை தொடர்­பான முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

“சாய்ந்­த­ம­ருது விவ­காரம் தொடர்பில் அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

அண்­மையில் இடம்­பெற்ற வரவு– செல­வுத்­திட்ட விவா­தங்கள் கார­ண­மா­கவே தாம­தங்கள் ஏற்­பட்­டன. தற்­போது தமிழ், சிங்­கள புத்­தாண்டு விடு­மு­றைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. அதனால் புத்­தாண்டு விடு­மு­றையின் பின்பு குறிப்­பிட்ட குழு ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது.

தாமதத்திற்கான காரணம் இதுவேயாகும். மாறாக இதுவேண்டுமென்றே கால தாமதப்படுத்தப்படவில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.