இஸ்­லா­மிய வரை­ய­றை­களை பேணி விடு­முறை காலத்தைக் கழிப்போம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

0 627

இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி விடு­முறை காலத்தைக் கழிப்போம் என இலங்கை முஸ்­லிம்­க­ளி­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சாரக் குழு செய­லாளர் அஷ்ஷைக் எச்.உமர்தீன் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இது தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஆரோக்­கி­யமும் ஓய்வும் மனி­த­னுக்கு அல்லாஹ் வழங்­கி­யுள்ள இரு பெரும் அருட்­கொ­டைகள். இது பற்றி நபி (ஸல்­லல்­லா­ஹு­அ­லைஹி வஸல்லம்) அவர்கள் பின்­வ­ரு­மாறு கூறி­னார்கள்.
“மனி­தர்­களில் அதி­க­மானோர் இரண்டு அருட்­கொ­டைகள் விட­யத்தில் நஷ்­ட­ம­டைந்து கொண்­டி­ருக்­கின்­றனர். 1.ஆரோக்­கியம். 2. ஓய்வு” என இப்னு அப்பாஸ் (ரழி­யல்­லாஹு அன்ஹ) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6412)

எம்மில் பலர் இவ்­விரு அருள்­களை பெரி­ய­ளவில் அலட்டிக் கொள்­வ­தில்லை. அவற்றை முறை­யாக பயன்­ப­டுத்திக் கொள்­வ­து­மில்லை. இதனால் எம்மில் பலர் வாழ்வில் பல்­வேறு கஷ்­டங்­க­ளையும் நஷ்­டங்­க­ளையும் எதிர்­கொள்­கின்­றனர்.

ஏப்ரல் மாத நடுப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­க­ளிலும் பெரும்­பா­லான மத்­ர­ஸாக்­க­ளிலும் விடு­முறை வழங்­கப்­ப­டு­வது வழமை. அந்த வகையில் சுமார் மூன்­றரை மாதங்கள் தொட­ராக கல்விப் பய­ணத்தில் ஈடு­பட்டு வந்த எமது மாண­வர்கள் விடு­முறை பெறும் காலம் இது­வாகும். இக்­காலப் பகு­தியில் எம்மில் சிலர் தமது பிள்­ளை­க­ளுடன் குடும்பம் சகிதம் உல்­லாசப் பய­ணங்­களை மேற்­கொள்­கின்­றனர்.

இவ்­வாறு விடு­மு­றையைக் கழிக்கும் நோக்கில் பய­ணங்கள் மேற்­கொண்டு ஊர்­க­ளையும் சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளையும் தரி­சிப்­பது இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணா­ன­தல்ல. எனினும், இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் ஒவ்­வொரு முஸ்­லிமும் இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி செயற்­ப­டு­வது அவ­சியம்.

ஆடை அணி­வது முதல் எமது உணவு, குடி­பா­னங்கள் ஆகிய அனைத்­திலும் ஹலால்- ஹராம் வரை­ய­றை­களை பேணி நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், இசைக் கச்­சே­ரிகள் என்­ப­வற்றில் கலந்து கொள்­ளுதல், போதைப்­பொ­ருட்­களை பாவித்தல், வீதி ஒழுங்­கு­களை மீறி நெரி­சலை ஏற்­ப­டுத்­துதல், பிற­ருக்கு இடை­யூறு விளை­வித்தல், அசௌ­க­ரியம் ஏற்­படும் வகையில் நடந்து கொள்­ளுதல் முத­லான விட­யங்­க­ளி­லி­ருந்து முற்று முழு­தாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடு­முறை காலத்தில் வழமை போன்று உரிய நேரத்தில் தொழுது, சன்­மார்க்க விளக்­கங்­களைக் கேட்டு, நற்­ப­ணி­களில் கால நேரத்தை கழிக்­கு­மாறும், சுற்­றுலா செல்வோர் இஸ்­லா­மிய வரை­ய­றை­க­ளையும் ஒழுக்க விழு­மி­யங்­க­ளையும் பேணி நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் முன்­மா­தி­ரி­யாக செயற்­ப­டு­மாறும் முஸ்­லிம்­க­ளிடம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சாரக் குழு வேண்­டுகோள் விடுக்­கி­றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.