இஸ்­மாயில் ஹஸ­ரத்தின் ஜனாஸா அக்­கு­ற­ணையில் நல்­ல­டக்கம்

0 638

கொழும்பில் நேற்று முன்­தினம் வபாத்­தான பிர­பல இஸ்­லா­மிய அறிஞர் இஸ்­மாயில் ஹஸ­ரத்தின் ஜனாஸா நல்­ல­டக்கம் பெருந்திரளா­னோரின் பங்­கேற்புடன் நேற்று மாலை அக்­கு­ற­ணையில் இடம்­பெற்­றது.

அக்­கு­றணையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இஸ்­மாயில் ஹஸரத், தனது வாழ்வை மார்க்கக் கல்வி மற்றும் தஃவா பணிக்­காக அர்ப்­ப­ணித்­த­வ­ராவார்.
அக்­கு­றணை ஜாமிஆ அர்­ரஹ்­மா­னிய்யா, மெல்­சி­ரி­புர உஸ்­வதுல் ஹஸனா, நாவ­லப்­பிட்­டிய தாருல் உலூம் அல் ஹாஷி­மிய்யாஹ், அட்­டு­லு­கமை ஜாமிஆ இன்­ஆமில் ஹஸன், பாணந்­துறை தீனிய்யஹ், குல்­லி­யதுர் ரஷாத் அல் அர­பிய்யஹ் (கொழும்பு மர்கஸ்), ஹட்டன் டிக் ஓயா உஸ்­மா­னிய்யாஹ் ஆகிய அரபுக் கல்­லூ­ரி­களில் இவர் விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார்.
உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தப்லீக் பணியில் ஈடு­பட்­டுள்ள அன்னார், ஆங்­கிலம், உருது, அரபு, தமிழ், பார­சீகம் ஆகிய மொழி­களில் தேர்ச்சி பெற்­ற­வ­ராவார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் கால­மான அன்­னாரின் ஜனாஸா அவ­ரது பிறப்­பி­ட­மான அக்­கு­ற­ணைக்கு நேற்றுக் காலை கொண்­டு­வ­ரப்­பட்டு அக்­கு­றணை தெலும்­பு­க­ஹ­வத்­தையில் உள்ள அவ­ரது தாயாரின் இல்­லத்­திலும் பின்னர் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லிலும் மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­பட்­டது.
அஸர் தொழு­கையின் பின்னர் அஸ்னா பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடாத்­தப்­பட்டு அக்­கு­றணை பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் நாட்டின் பல பாகங்­க­ளிலும் இருந்து வருகை தந்த உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.