நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்தாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுக்கள்

மேல­தி­க­மாக 36 கொலை முயற்சி வழக்­குகள்

0 665

நியூ­சி­லாந்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடு­பட்ட தாக்குதல்தாரி பிரெண்டன் டொரன்ட் 50 கொலை குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­ள­வி­ருப்­ப­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது­கு­றித்து பொலிஸ் கூறுகையில், நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தாக்­குதல் நடத்­திய குற்­ற­வாளி 50 கொலை குற்றச்­சாட்டுக்களை எதிர் கொள்­ள­வி­ருக்­கிறார். மேலும் 36 பேரை கொலை செய்ய முயன்­ற­தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கில் அவ­ருக்கு பிணை வழங்­கப்­ப­ட­வில்லை” என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

நியூ­ஸி­லாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்­ளி­வாசல் மற்றும் லின்வூட் பகு­தியில் உள்ள பள்­ளி­வா­சலில் கடந்த மாதம் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

அப்­போது அங்கு வந்த இவர் தான் வைத்­தி­ருந்த துப்­பாக்­கியால் கண்­மூ­டித்­த­ன­மாக சுட்டுக் கொன்­றார்.

இதில்  50 பேர் பலி­யா­ன­துடன் பலர் காய­ம­டைந்­தனர்.

இந்தத் துப்­பாக்­கிச்­சூட்டில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான பிரெண்டன் டொரன்ட் கைது செய்­யப்­பட்டு அவ­ரிடம் விசா­ரணை நடந்து வரு­கி­றது. உல­கையே  இந்த சம்­பவம் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது.

இந்தச் சம்­ப­வத்தை தொடர்ந்து தானி­யக்க துப்­பாக்கி மற்றும் ரைபில் ரக துப்­பாக்­கி­களை  கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக  நியூஸிலாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.