நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்க நாட்டில் இனவாதம் பரப்பப்படுகின்றது

சகிப்புத்தன்மை அவசியம் என்கிறார் ஹக்கீம்

0 620

நாட்டில் சமய நல்­லி­ணக்­கத்­திற்கு ஊறு விளை­விக்கக் கூடி­ய­தாக ஒரு சாரார் குறு­கிய கருத்து வேறு­பா­டு­களை தூண்­டு­கின்ற விதத்தில் இன­வா­தத்தை பரப்பி வரு­வது கவ­லைக்­கு­ரி­யது என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆன்­மி­கத்தில் அதிகம் கவனம் செலுத்­து­வ­துடன் சகிப்புத் தன்­மையும் அவ­சி­ய­மா­னது என்றார்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பலா­பத்­த­லவில் நேற்­றை­ய­தினம் யாத்­தி­ரி­கர்கள் ஓய்­வெ­டுக்கும் விடு­தி­யான இரண்டு மாடி கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எனது அமைச்­சி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் ஆலோ­சித்த போது இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எ.எ.விஜ­ய­துங்க இந்த பிர­தே­சத்தில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஓய்வு எடுக்கும் விடு­தி­யொன்றை அமைக்க வேண்­டு­மென்று வித்­தி­யா­ச­மான ஆலோ­ச­னை­யொன்றை எனக்கு வழங்­கினார்.

இந்த நாட்டில் சிவ­னொ­ளி­பாத மலை என்­பது சமய நல்­லி­ணக்­கத்தின் அடை­யாள சின்­ன­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான தல­மொன்­றிற்கு பிர­வே­சிக்கக் கூடி­ய­தொரு இடத்தில் இத்­த­கைய யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஒரு விடுதி அமையப் பெறு­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.

இந்த நாட்டில் சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர், நாட்டின் தேசிய கொடியை தயா­ரிக்கும் போது பல யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. அவற்றில் ஒன்று தான் சிவ­னொ­ளி­பாத மலையை தேசியக் கொடியில் இடம்­பெறச் செய்­வது என்­ப­தாகும். அது தொடர்­பாக நீண்ட விவா­தங்கள் கூட நடந்­தன.

தேசிய கொடியை நாங்கள் அனை­வரும் மதிக்­கின்றோம். ஏற்றுக் கொள்­கின்றோம். அதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. ஆனாலும், இந்த மலையை பற்றி வெவ்­வேறு சம­யங்­களை பின்­பற்­று­ப­வர்கள் மத்­தியில் ஒரு வித விசு­வாசம் இருந்து வரு­கின்­றது.

பௌத்­தர்கள், இந்த மலையில் புத்த பெருமான் தடம் பதித்­த­தாக நம்­பு­கின்­றார்கள். அவ்­வாறே முதல் மனிதர் ஆதம் நபி, சுவர்க்­கத்தில் தவ­றி­ழைத்­ததன் கார­ண­மாக அங்­கி­ருந்து உல­கிற்கு அனுப்­பப்­பட்ட போது பாவா ஆதம் மலையில் கால் பதித்­த­தாக முஸ்­லிம்­களில் சிலர் நம்­பு­கின்­றனர். அவ்­வாறே கிறிஸ்த்­த­வர்­களும் ஆதாம் என்ற இறை தூதர் இங்கு வந்­தி­றங்­கி­ய­தாக கூறு­கின்­றனர். அவ்­வாறே இந்­துக்­களும் சிவ பெரு­மானை சம்­பந்­தப்­ப­டுத்தி இது பற்றி கூறி வரு­கின்­றனர்.

அண்­மையில் இரத்­தி­ன­பு­ரிக்குச் சென்­றி­ருந்த போது அங்­குள்ள சமன் தேவா­லயம் என்ற வணக்­கஸ்த்­தலம் முற்­றிலும் புன­ர­மைக்கப் பட்­டி­ருந்­ததை கண்டேன். நான் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அந்தப் பகு­திக்கு சென்­றி­ருந்த போது தூர்ந்­து­விடக் கூடிய நிலையில் காட்­சி­ய­ளித்த அந்த சமன் தேவா­லயம் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் 90 மில்­லியன் ரூபாய் நிதி ஒதுக்­கீட்டில் புன­ர­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

எங்­க­ளு­டைய அர­சாங்கம் முன்­னெப்­போ­தையும் விட, கூடுதல் கரி­சனை எடுத்து எல்லா சம­யங்­க­ளுக்கும் உரிய வணக்­கஸ்த்­த­லங்­களை அபி­வி­ருத்தி செய்து வரு­கின்­றது.

சிவ­னொ­ளி­பாத மலைக்கு செல்லும் பக்­தர்­களின் தேவையை கருத்திற் கொண்டு, இந்த யாத்­தி­ரி­கர்கள் ஓய்­வெ­டுக்கும் விடு­தியை நிர்­மா­ணித்­தி­ருக்­கின்றோம்.

எங்கள் நாட்டில் சமய நல்­லி­ணக்­கத்­திற்கு ஊறு விளை­விக்கக் கூடிய விதத்­தி­லேயே ஒரு சாரார் குறு­கிய கருத்து வேறு­பா­டு­களை தூண்­டு­கின்ற விதத்தில் இன­வா­தத்தை பரப்பி வரு­வது கவ­லைக்­கு­ரி­யது.

கடந்த ஆட்சி காலத்தில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து மக்கள் மத்­தியில் வேறு­பா­டு­களை விதைக்கும் அமைப்­புக்கள் தோன்றி, தேவை­யற்ற அட்­ட­கா­சங்­களில் ஈடு­பட்­டன. இவ்­வா­றான தீவி­ர­வாத குழுக்கள் சகல சம­யங்­களை பின்­பற்­றுவோர் மத்­தி­யிலும் செயற்­ப­டாமல் தடுப்­ப­தற்கு சமயத் தலை­வர்கள் மிகவும் பொறுப்­பு­ணர்ச்­சி­யு­டனும், கண்­கா­ணிப்­பு­டனும் இருந்து அவர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­து­வதில் கூடுதல் கவனம் செலுத்­து­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.

எல்லா சம­யங்­களை அனுஷ்­டிப்­ப­வர்கள் மத்­தி­யிலும் தீவி­ர­வாத சிந்­தனை போக்­குள்­ள­வர்கள் இருக்­கத்தான் செய்­கின்­றார்கள். சிறிய சம்­ப­வங்­களை கார­ண­மாக வைத்து அசம்­பா­வி­தங்கள் நடக்­கின்­றன. ஆன்­மி­கத்தில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சகிப்புத் தன்மையும் இன்றியமையாதது.

எங்கள் அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சகல மக்களும் பயன்படக் கூடிய விதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க, இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் மாலின் லொகுபொத்கம, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், ஆகியோர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.