உங்கள் துணிகரமான மனிதாபிமான நடவடிக்கைகள் இனவாத அரசியல்வாதிகளை தலைகுனியச் செய்துள்ளது

நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ந.தே.மு. பிரதி தவிசாளர் தெரிவிப்பு

0 611

உங்கள் நாட்டு முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­டது போன்ற மிலேச்­சத்­த­ன­மான, கோழைத்­த­ன­மான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை நாமும் அனு­ப­வித்­த­வர்கள் என்ற வகையில் உங்கள் வேத­னையை புரிந்து கொள்­கிறோம். இந்தச் சந்­தர்ப்­பத்தில் நீங்கள் மேற்­கொண்ட துணி­க­ர­மான மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கத்­தேய நாடு­களின் இன­வாத அர­சியல் தலை­வர்­க­ளையும், ஏனைய சந்­தர்ப்­ப­வாத, சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளையும் வெட்­கித்­த­லை­கு­னியச் செய்­தி­ருக்­கி­றது. இந்த முன்­மா­தி­ரி­மிக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் உங்­க­ளுக்­கா­கவும் உங்கள் நாட்டு மக்­க­ளுக்­கா­கவும் நாம் இறை­வனை பிரார்த்­திக்­கிறோம்’ என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் நியூ­சி­லாந்து பிர­த­ம­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் நியூ­சி­லாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் போது இரண்டு பள்­ளி­வா­சல்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாத சம்­பவம் தொடர்பில் நியூ­சி­லாந்தின் பிர­த­ம­ருக்கு பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார். அக்­க­டி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நீங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள உயர்ந்த மனி­தா­பி­மான பண்­பு­களை பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு சமூக அர­சியல் கட்­சியின் ஸ்தாபகர் என்ற வகை­யிலும் அதன் தற்­போ­தைய பிரதித் தவி­சாளர் என்ற வகை­யிலும் உங்கள் வேத­னை­களை பகிர்ந்து கொள்­வ­தோடு, நீங்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக எமது மன­மார்ந்த நன்­றி­க­ளையும் வாழ்த்­துக்­க­ளையும் பகிர்ந்து கொள்­கின்றேன்.

கிரிஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் துன்­பியல் நிகழ்­வுகள் தொடர்பில் நீங்கள் முன்­னெ­டுத்து வரு­கின்ற உறு­தி­யான முன்­மா­திரி மிக்க செயற்­பா­டு­களைப் பாராட்டி இது போன்ற ஆயி­ரக்­க­ணக்­கான கடி­தங்கள் இக்­கா­லப்­ப­கு­தியில் நிச்­சயம் வந்து குவிந்­தி­ருக்கும். இருப்­பினும் இந்த சந்­தர்ப்­பத்தில் எமது வாழ்த்­துக்­க­ளையும் பிரார்த்­த­னை­க­ளையும் உங்­க­ளுக்கு தெரி­விப்­பது எமது கட­மை­யென நம்­பு­கின்றேன்.

எமது கட்சி உரு­வான அதே பிர­தே­சத்தைச் சேர்ந்த சுமார் 5 குடும்­பங்கள் உங்­க­ளு­டைய நாட்டின் கிரிஸ்ட்­சேர்ச்சில் வாழ்ந்து வரு­கின்­றனர். அது மாத்­தி­ர­மல்­லாது துப்­பாக்­கிச்­சூடு நடாத்­தப்­பட்ட பள்­ளி­வா­சலில் குறித்த தினம் அவர்­களில் சிலர் தொழு­கைக்­கா­கவும் சென்­றி­ருந்­தனர். எனினும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அவர்கள் உயிர்­தப்­பி­யுள்­ளனர்.

இன்­றி­லி­ருந்து சுமார் 30 ஆண்­டு­க­ளுக்கு முன்னாள் 1990 ஆம் ஆண்டு எமது நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி உரு­வான காத்­தான்­குடி மண்­ணிலும் இதே கிரைஸ்ட்சேர்ச் தாக்­கு­த­லுக்கு ஒப்­பான மிலேச்­சத்­த­ன­மான பள்­ளி­வாசல் தாக்­குதல் ஒன்று நடை­பெற்­றி­ருந்­த­மை­யினை நீங்கள் அறிந்தால் நிச்­சயம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வீர்கள்.

அத்­துன்­பியல் சம்­ப­வத்தில் சிறு­வர்கள், பெரி­ய­வர்கள் என 5 தொடக்கம் 80 வயது வரை­யான 103 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். ஒரு கிலோ மீற்றர் இடை­வெ­ளியில் அமைந்­துள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இரவு நேர வணக்­கத்­திற்­காக சென்­றி­ருந்த மக்­களே அன்று இவ்­வாறு எவ்­வித கார­ணங்­களோ நியா­யங்­களோ இன்றி புலிப் பயங்­க­ர­வா­தி­களால் கோழைத்­த­ன­மாக படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

என­வேதான், உங்கள் நாட்டு மக்கள் அனு­ப­விக்கும் அதே வகை­யான மன­வே­த­னை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற அடிப்­ப­டையில், எமது இந்தக் கடிதம் உங்­க­ளது பயங்­க­ர­வா­தத்­திற்­கெ­தி­ரான உறு­திப்­பாட்­டுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கு­மென நம்­பு­கின்றோம்.

‘உல­கி­லுள்ள அனைத்து நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுமே ஒரு உடலைப் போன்­ற­வர்கள். உடலில் எந்­தப்­ப­கு­தியில் காயம் ஏற்­பட்­டாலும் அது முழு உட­லுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்’ என்­ப­துதான் முஸ்­லிம்­க­ளா­கிய எங்­களின் நம்­பிக்­கை­யாகும். நீங்கள் குறிப்­பிட்­டுக்­காட்­டிய இந்த நபி­மொ­ழி­யா­னது மிகப் பொருத்­த­மா­னது மாத்­தி­ர­மன்றி இன்று உலகில் பல இடங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்ற இன­வா­தி­க­ளி­னதும் , இஸ்­லா­மிய மாரக்­கத்­திற்­கெ­தி­ரான அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் கவ­னத்­திற்கு எடுத்துச் சொல்­லப்­பட வேண்­டி­ய­து­மாகும்.

துர­திஷ்­ட­வ­ச­மாக இத்­துன்­பியல் நிகழ்வு உங்­க­ளு­டைய அழ­கான அமை­தி­யான நியூ­சி­லாந்தில் நடை­பெற்­று­விட்­டாலும் கூட, அந்த ஈனச்­செ­யலைச் செய்த பயங்­க­ர­வாதி உங்கள் நாட்­டைச்­சார்ந்த ஒரு­வ­ரல்ல என்­பது உங்­க­ளுக்கு ஆறுதல் அளிப்­ப­தாக இருந்­தி­ருக்கும். இச்­சம்­ப­வத்தின் பின் நியூ­சி­லாந்து மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு காட்­டிய இரக்­கமும், அவர்­க­ளது சகிப்­புத்­தன்­மையும், அர­வ­ணைப்பும் நியூ­சி­லாந்து மக்­களை உலக அளவில் மிகச்­சி­றந்த முன்­மா­தி­ரி­யான மக்­க­ளாக வேறு­ப­டுத்­திக்­காட்­டி­யுள்­ளது. அங்­குள்ள ஒவ்­வொரு குடி­ம­கனும் இச்­சம்­பவம் நியூ­சி­லாந்­திற்கு எப்­ப­டி­யான ஒரு வடு­வாக மாறி­யுள்­ளது என்­பது குறித்து கவ­லைப்­ப­டு­வ­தையும் அறிய முடி­கி­றது.

இச்­சம்­ப­வத்தின் ஊடாக இறைவன் உங்­க­ளையும் கூட உலக அளவில் இன்று ஒரு சிறந்த தலை­மைத்­து­வத்­திற்கு எடுத்­துக்­காட்­டாக மாற்­றி­யுள்ளான். ஊழல் மோசடி மிக்க எத்­த­னையோ தலை­வர்­க­ளைக்­கொண்ட இவ்­வு­லகில் உங்­க­ளு­டைய இப்­போ­தைய செயற்­பா­டுகள் உண்­மையில் மிகவும் போற்­றத்­தக்­கது.
கடந்த 30 வருட பயங்­க­ர­வாத யுத்­தத்­தினால் எமது நாடான இலங்­கை­யிலும் கூட நாம் சுமார் ஒரு இலட்சம் உயிர்­களை காவு கொடுத்­துள்ளோம் தமிழ், முஸ்லிம், சிங்­கள இன பேத­மின்றி அனை­வ­ருமே யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வெறும் 39 வயதைக் கொண்­டுள்ள நீங்கள் இன்று செய்திருக்கின்ற சாதனை அளப்பெரியது. மத்திய கிழக்கு சுயநல அரசியல் தலைவர்களும் இனவாத மேற்கத்தேய அரசியல் தலைவர்களும் வெட்கித் தலைகுனிகின்ற அளவிற்கு இன்று நீங்கள் நியூசிலாந்தினை மேலும் அமைதியான நாடாக, ஒற்றுமையான நாடாக, மனிதர்கள் வாழச்சிறந்த நாடாக மாற்றியுள்ளீர்கள்.

உங்களுடைய மனிதாபிமானம் உண்மையில் உலக முஸ்லிம்களை, சமாதான செயற் பாட்டாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. உண்மை யிலேயே நீங்கள் எமது அன்பையும் பிரார்த்தனைகளையும் வென்றுள்ளீர்கள். உங்களுடைய இந்த முன்மாதிரிமிக்க செயற்பாடுகளை இறுதிவரை நீங்கள் முன்னெடுக்கவும் உங்களுடைய நலனுக்காகவும் உங்களுடைய நாட்டு நலனுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.