சம்மாந்துறையில் 47 பள்ளிகள் பதிவு செய்யப்படாதுள்ளன

முஸ்லிம் சமய திணைக்களம் தெரிவிப்பு

0 695

2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து இன்­று­வரை 400 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 47 பள்­ளி­வா­சல்கள் இது­வரை பதிவு செய்து கொள்­ளா­தி­ருக்­கின்­றன என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் விடிவெள்ளிக்கு இவ்­வாறு கூறி­னார். அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கை­யில், ‘பள்­ளி­­வா­சல்­கள் அனைத்தும் கட்­டா­யமாக திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளப்­பட வேண்டும். சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தில் 57 பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. அவற்றில் 10 பள்­ளி­வா­சல்­களே திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்­ளன. 47 பள்­ளி­வா­சல்கள் இது­வரை தம்மைப் பதிவு செய்து கொள்­ளா­துள்­ளன. அப்­பள்­ளி­வா­சல்­களை தாம­த­மின்றி பதிவு செய்து கொள்­ளு­மாறு கோரி­யுள்ளோம்.

சம்­மாந்­துறைப் பகு­தியில் மஜ்லிஸ் சூரா என்ற அமைப்­பொன்றின் கீழ் இப்­பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாகம் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு சிறந்த அமைப்­பாக இயங்கி வரு­கி­றது. ஸக்காத் வழங்கல் மற்றும் பள்­ளி­வாசல் பணி­யா­ளர்­க­ளுக்­கான சம்­பளம் வழங்கல் எனும் பணிகள் மஜ்லிஸ் சூராவினாலே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது நல்­லவோர் ஏற்­பா­டாகும். என்­றாலும் பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­­க­ளத்தில் கட்­டாயமாகப் பதிவு செய்து கொள்­ளப்­பட வேண்டும்.

பள்­ளி­வா­சல்கள் பதி­வு­களை மேற்­கொள்­­வதன் மூலம் எதிர்­­கா­லத்தில் பல்­வேறு நன்­மை­களைப் பெற்றுக்கொள்ள முடியும். பதி­வு­க­ளுக்­காக விண்­ணப்­பித்­துள்ள பள்­ளி­வா­சல்­களில் 5 பள்­ளி­வா­சல்­களின் பதி­வு­களே நிலு­வையில் உள்­ளன. சில ­குறை­பா­டுகள் கார­ண­மாக அவை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு பள்­ளி­வா­சல்­களை சட்­ட­ரீ­தி­யாக ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது. எனவே பள்­ளி­வா­சல்கள் மஜ்லிஸ் சூரா போன்ற அமைப்­பு­க­ளின் கீழ் இயங்கி வந்­தாலும் கட்­டா­­ய­மாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­ல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­து­கொள்ள வேண்டும்’ என்­றார்.

Leave A Reply

Your email address will not be published.