கருமலையூற்று பள்ளிவாசல் காணியை உடன் விடுவிக்குக

கடந்த கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டு

0 806

திரு­கோ­ண­மலை மாவட்ட  கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அமைந்­துள்ள காணியை உட­ன­டி­யாக அர­சாங்கம் விடு­விக்க வேண்டும் என பிர­தேச மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

அர­சாங்­கத்­தினால் வடக்கு கிழக்கில்  இரா­ணுவ முகாம்கள் அமைந்­தி­ருந்த காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணப்­ப­டு­கின்ற காணி  இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனவும் மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இக் காணியை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தேர்தல் காலங்­களில் பல்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களும் உறு­தி­ய­ளித்த போதிலும் அந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அண்மைக் கால­மாக வடக்கு கிழக்கில் அதி­க­ள­வி­லான பிர­தே­சங்­களில் மக்கள் பாவ­னைக்­காக பல காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் முஸ்­லிம்கள் வணக்க வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஒதுக்­கப்­பட்ட கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் இன்னும் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லேயே காணப்­ப­டு­வ­தா­கவும் மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

ஆரம்ப காலத்தில் கடற்­ப­டைக்குச் சொந்­த­மான காணி எனக் கூறப்­பட்ட போதிலும் தற்­போது துறை­முக அதி­கார சபைக்குச் சொந்­த­மான காணி எனக் கூறி பள்­ளி­வாசல் விட­யத்தில்  இழுத்­த­டித்து வரு­வ­தா­கவும் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

எனவே கரு­ம­லை­யூற்று பள்ளி விவ­காரம் தொடர்பில் நல்­லாட்சி அரசும், திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சி­யல்­வா­தி­களும் கூடிய கவனம் செலுத்தி வணக்­க­வ­ழி­பா­டு­களை மேற்கொள்வதற்கேற்ற வகையில் பள்ளிவாசல் காணியை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.