ஹெரோயின், கொக்கையின், கஞ்சா போதைப் பொருட்களுடன் முதல் 3 மாதங்களில் 13298 பேர் கைது
2340 கிலோ போதைப்பொருட்களும் மீட்பு
இந்த வருடத்தின் முதல் 3 மாத காலப்பகுதியில் 2340 கிலோ நிறையுடைய ஹெரோயின், கொக்கையின், கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகை கொக்கையின் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
இதன் போதே அவர் ஊடகங்களுக்கு மேற்படி தகவலைத் தெரிவித்தார். இவ்வருடத்தில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வரையான தகவல்களை மையப்படுத்தியே பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.
ஹெரோயின்:
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019.03.28 வரை இலங்கையில் ஹெரோயின் தொடர்பில் ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 86 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கைது செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 270 ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 22995 சுற்றிவளைப்புக்களில் , 181 கிலோகிராம் 546 கிராம் 967 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 22997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு 26002 சுற்றிவளைப்புக்களில் , 40 கிலோகிராம் 54 கிராம் 186 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 26047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு 27352 சுற்றிவளைப்புக்களில் , 196 கிலோகிராம் 851 கிராம் 128 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 27458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 29282 சுற்றிவளைப்புக்களில் , 278 கிலோகிராம் 378 கிராம் 162 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 29272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு 40963 சுற்றிவளைப்புக்களில் , 737 கிலோகிராம் 02 கிராம் 82 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 40987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவ்வருடம் மார்ச் 28 ஆம் திகதி வரையில் 11492 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், , 731 கிலோகிராம் 755 கிராம் 51 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் 11509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கையின்:
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019.03.28 வரையில் கொக்கையின் தொடர்பில் பொலிஸாரால் 104 சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன. அதன் போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆகும்.
2014 ஆம் ஆண்டு மட்டும் 05 சுற்றிவளைப்புக்களில் 26 கிராம் 657 மில்லிகிராம் கொக்கையின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு 06 சுற்றிவளைப்புக்களில் , 192 கிராம் 986 மில்லிகிராம் கொக்கையின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு 21 சுற்றிவளைப்புக்களில் , 1568 கிலோகிராம் 173 கிராம் 642 மில்லிகிராம் கொக்கையின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 21சுற்றிவளைப்புக்களில் , 220கிலோகிராம் 697 கிராம் 530 மில்லிகிராம் கொக்கையின்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு 16 சுற்றிவளைப்புக்களில் , 18 கிலோகிராம் 503 கிராம் 213 மில்லிகிராம் கொக்கையின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே வேளை , இவ்வருடம் இது வரையான காலப்பகுதியில் 35 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 1 கிலோகிராம் 439 கிராம் 26 மில்லிகிராம் கொக்கையின் போதைப்பொருளுடன் 35 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா கஞ்சா:
கஞ்சா போதைப் பொருள் தொடர்பிலேயே இலங்கையில் அதிக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014.01.01. முதல் 2019.03.28 வரையிலான முழு காலப்பகுதியில் கஞ்சா தொடர்பில் இலங்கையில் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 310 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் கஞ்சா தொடர்பில் 43594 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் 19437 கிலோகிராம் 811 கிராம் 70 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 43478 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு 52092 சுற்றிவளைப்புக்களில் 6353 கிலோகிராம் 668 கிராம் 447 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 51847 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு 47962 சுற்றிவளைப்புக்களில் 4050 கிலோகிராம் 21 கிராம் 851 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 47778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 51878 சுற்றிவளைப்புக்களில் 4660 கிலோகிராம் 749 கிராம் 893 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 51778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு 54681 சுற்றிவளைப்புக்களில் 4084கிலோகிராம் 802 கிராம் 731மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளதுடன், அது தொடர்பில் 54675பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக இவ்வருடத்தின் மார்ச் 28 வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 11883 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள் ளப்பட்டுள்ளதுடன் 1607 கிலோகிராம் 833 கிராம் 52மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் 11754 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli