பலஸ்தீன ஆக்கிரமிப்பை எடுத்தியம்பும் ‘நில தினம்’

0 743

‘பலஸ்­தீன நிலம்’ தினம் வரு­டாந்தம் மார்ச் 30 ஆம் திகதி உல­க­ளவில் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது பலஸ்­தீனில் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலம் மற்றும் அது தொடர்­பான பிரச்­சி­னைகள் பேசப்­ப­டு­வ­துடன் விழிப்­பு­ணர்வும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இம்­முறை இலங்­கையின் கிழக்கு மாகா­ணத்தில் இத் தினம் தொடர்­பான நிகழ்­வுகள் பர­வ­லாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இந் நிகழ்­வு­களில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் தார் ஹம்­தல்லா ஸைத் பங்­கு­கொள்­கிறார்.

இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட தமது நிலத்தை விடு­விக்­கு­மாறு கோரி 1976 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி போராட்டம் நடத்­திய மக்கள் மீது இஸ்ரேல் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டது. இதில் 6 பேர் கொல்­லப்­பட்­டனர். இந்த சம்­ப­வத்தை நினை­வு­கூரும் வகை­யி­லேயே வரு­டாந்தம் இத்­தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

பலஸ்­தீன நில தினத்தை முன்­னிட்டு பலஸ்தீன் மத்­திய புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம் நேற்­றைய தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் நில ஆக்­கி­ர­மிப்­புகள் தொடர்­பான விரி­வான விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

பலஸ்­தீனின் 13 மில்­லியன் சனத் தொகையில் அரை­வா­சிக்கும் அதி­க­மானோர் அக­தி­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர்.

இஸ்ரேல் இது­வரை பலஸ்­தீ­னுக்கு வர­லாற்று ரீதி­யாக சொந்­த­மாக 27 ஆயிரம் சதுர அடி பரப்­ப­ள­வுள்ள நிலைத்தை அப­க­ரித்­துள்­ளது. இது மொத்த நிலத்தில் 85 வீத­மாகும். மேற்குக் கரையில் மாத்­திரம் 2072 ஏக்கர் விவ­சாய நிலம் இஸ்­ரே­லினால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்­ப­ரப்பில் 37 வீத­மாகும். அங்கு 931.5 ஏக்கர் விவ­சாய நிலம் மாத்­தி­ரமே பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மா­க­வுள்­ளது. இது மேற்குக் கரையின்  மொத்த நிலப்­ப­ரப்பில் 17 வீத­மாகும்.

2000 முதல் 2018 வரை­யான காலப்­ப­கு­தியில் சுமார் 1 மில்­லியன் மரங்கள் இஸ்­ரே­லினால் பிடுங்­கி­யெ­றி­யப்­பட்­டுள்­ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்­திரம் 7122 மரங்கள் பிடுங்­கப்­பட்­டுள்­ளன.

2017 வரை மேற்குக் கரையில் 435 இஸ்­ரே­லிய சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன. இவற்­றுடன் இணைந்து இரா­ணுவ கேந்­திர நிலை­யங்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 2018 இல் மாத்­திரம் மேற்குக் கரையில் இஸ்­ரே­லினால் 9384 புதிய வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கடந்த ஆண்டில் 9 புதிய குடி­யேற்­றத்­திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

2017 ஆம் ஆண்டு வரை­யான கணிப்­பீ­டு­க­ளின்­படி மேற்குக் கரையில் 653,621 பேர் இஸ்­ரே­லினால் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

பலஸ்­தீனைப் பொறுத்­த­வ­ரையில் மிக மோச­மான முறையில் அடக்­கு­மு­றை­யையும் ஆக்­கி­ர­மிப்­பையும் சந்­தித்­துள்ள பிர­தே­சமே காஸா பள்­ளத்­தாக்­காகும். சில தினங்­க­ளுக்கு முன்னர் கூட காஸா மீது இஸ்ரேல் நடத்­திய வான் தாக்­கு­தலில் 500 வீடுகள் சேத­மாக்­கப்­பட்­டன. இவற்றில் 30 வீடுகள் முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்­ளன.

உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்­சா­லை­யாக காஸா அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. காஸாவில் வாழும் 10 வீத­மான மக்கள் மாத்­தி­ரமே சுத்­த­மான குடி நீரைப் பெறு­கின்­றனர். மிகுதி 90 வீத­மானோர் மனிதப் பாவ­னைக்­கு­த­வாத மாச­டைந்த நீரையே பரு­கு­கின்­றனர். அதிலும் பலஸ்­தீ­னர்கள் தமக்குச் சொந்­த­மான நீரை இஸ்­ரே­லி­ட­மி­ருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். மேற்குக் கரையின் பிர­தான நீர் மூல­மான அகுபர் மலை­யி­லி­ருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. அத்­துடன் மேற்குக் கரையில் பலஸ்­தீன நக­ரங்­க­ளுக்­கான நீர் விநி­யோகம் பல நாட்­க­ளுக்கு அல்­லது வாரக் கணக்கில் தொடர்ச்­சி­யாக இஸ்­ரே­லினால் துண்­டிக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு பலஸ்­தீன மக்கள் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­பினால் சொல்­லொணா துய­ரங்­களைச் சந்­தித்து வரு­கின்­றனர். இஸ்ரேல் தனது ஆக்­கி­ர­மிப்­பையும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக தொடர்ந்தும் தீவி­ர­மாக முன்­னெ­டுத்தே வரு­கி­றது. இதனை உல­கி­லுள்ள எந்­த­வொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னரை விடப் பாரிய உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறார்.

இவ்வாறானதொரு தீர்க்கமான காலப்பகுதியிலேயே இந்த வருட பலஸ்தீன நிலம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமும் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிவதுடன் அவர்களது விடுதலைக்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் முன்வர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.