கிரைஸ்ட்சேர்ச் தாக்­குதல்: அவுஸ்­தி­ரே­லியா சமூக ஊடக சட்­டத்தை இறுக்­க­மாக்கத் திட்டம்

0 645

நியூ­சி­லாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் தாக்­கு­தலில் நடை­பெற்­றது போன்று சமூக ஊடகத் தளங்­களை ஆயு­த­மாக்­கு­வ­தி­லி­ருந்தும் வன்­முறை குற்­றங்­களை நேர­லை­யாகக் காண்­பிப்­ப­தி­லி­ருந்தும் மக்­களைத் தடுப்­ப­தற்கு இறுக்­க­மான பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான புதிய சட்­டத்­தினை அறி­மு­கப்­ப­டுத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

28 வய­தான அவுஸ்­தி­ரே­லிய நபர் முக­நூலின் மூலம் பள்­ளி­வா­ச­லொன்றில் தாக்­குதல் நடத்தும் 17 நிமிட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை நேர­லை­யாகக் காண்­பித்­தி­ருந்தார். மார்ச் மாத நடுப்­ப­கு­தியில் இடம்­பெற்ற இத் தாக்­குதல் சம்­ப­வத்தில் 50 பேர் கொல்­லப்­பட்­டனர்.

இப் புதிய சட்­டத்­துடன் சமூக ஊடக ஜாம்­ப­வான்­களை, அவர்கள் உட­ன­டி­யாக வன்­முறை உள்­ள­டக்கம் கொண்ட விட­யங்­களை நீக்­கா­விட்டால் அவர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக்கி சிறைத் தண்­ட­னையும் மில்­லியன் கணக்­கான டொலர் தண்­டப்­ப­ணமும் விதிக்கும் உலகின் முத­லா­வது நாடாக உரு­வா­க­வுள்­ளது.

குறித்த சட்­ட­மூலம் அடுத்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் ஸ்கொட் மொறிசன் சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார்.

பெரிய சமூக ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­க­ளது தொழில்­நுட்­ப­வியல் உற்­பத்­திகள் கொலை­காரப் பயங்­க­ர­வா­தி­களால் முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது கட­மை­யாகும் என சட்­டமா அதிபர் மற்றும் தொழில்­நுட்ப அமைச்­ச­ருடன் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கையில் மொறிசன் தெரி­வித்­துள்ளார்.

புதிய சட்­ட­மூலம் சமூக ஊடக நிறு­வ­னங்கள் தமது தொழில்­நுட்­பங்கள் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அச்­சு­றுத்­தல்­களை நீக்­கு­வ­தற்கு தமது செயற்­பா­டு­களை ஒன்­றி­ணைத்து சட்ட நடை­மு­றை­யாக்க அமைப்­புக்­க­ளோடும் புல­னாய்வு முக­வ­ர­கங்­க­ளோடும் பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்கும்.

சமூக ஊடக நிறு­வ­ன­மொன்று வன்­மு­றை­சார்ந்த உள்­ள­டக்­கங்­களை நீக்­கா­விட்டால் குறித்த நிறு­வ­னத்தின் வரு­டாந்த வரு­மா­னத்தில் குறிப்பிட்ட வீதத்தை தண்டப்பணமாகச் செலுத்தவேண்டும். அத்தோடு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு மூன்று வருடங்கள் வரையான சிறைத் தண்டனையை விதிப்பதற்கான ஏற்பாடுகளை இச் சட்டம் கொண்டுள்ளது என சட்டமா அதிபர் கிரிஸ்டியன் போர்டர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.