லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத அகதிகள் மீட்பு

0 574

லிபி­யாவின் மேற்கு கடற்­ப­கு­தியில் இறப்பர் படகில் ஆபத்­தான வகையில் பயணம் மேற்­கொண்ட 117 சட்­ட­வி­ரோத அக­தி­களை கட­லோர பாது­காப்புப் படை­யினர் மீட்­டனர்.

லிபி­யாவில்  வன்­முறை, உள்­நாட்டுப் போர், வறுமை உள்­ளிட்ட கார­ணங்­களால் அங்­கி­ருந்து வெளி­யேறி வேறு நாடு­க­ளுக்குச் செல்ல முற்­ப­டு­கின்­றனர். அத்­துடன் ஏனைய ஆபி­ரிக்க நாடு­களில் இருந்தும் அக­திகள் கடல் வழி­யாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்குச் செல்­வ­தற்கு லிபியா ஒரு முக்­கிய போக்­கு­வ­ரத்து வழி­யாக உள்­ளது.

லிபி­யாவில் இருந்து அவர்கள் மத்­திய தரைக்­கடல் வழி­யாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு, சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் கும்­பல்­களின் உத­வி­யுடன் பட­கு­களில் செல்­கின்­றனர்.

இவ்­வாறு செல்­லும்­போது பல சமயம் விபத்தில் பெரிய அளவில் உயி­ரி­ழப்பு ஏற்­ப­டு­கி­றது.

இதனால் லிபிய கடற்­ப­கு­தி­களில் கண்­கா­ணிப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், லிபி­யாவின் அல் கோம்ஸ் கடற்­ப­கு­தியில் நேற்று முன்­தினம் ஏரா­ள­மான அக­திகள் ஒரு இறப்பர் படகில் சென்­று­கொண்­டி­ருந்­தனர். அவர்­களின் படகு கடலில் தள்­ளா­டி­யதைக் கவ­னித்த லிபிய கட­லோர காவல் படை­யினர், உட­ன­டி­யாக அங்கு சென்று அனை­வ­ரையும் மீட்­டனர்.

விசா­ர­ணையில் அவர்கள் பல்­வேறு ஆபி­ரிக்க நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்­பது தெரி­ய­வந்­தது.

மீட்­கப்­பட்ட 84 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 18 குழந்­தைகள் என 117 பேருக்கும் தேவை­யான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் உள்ள அகதிகள் மையத்திற்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.