தமிழ், முஸ்லிம் வாக்குகளால் தெரிவான மைத்திரி கோத்தா அணியுடன் சேரலாமா?

அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி

0 547

பௌத்த சிங்­கள வாக்­கு­களால்  தாம் ஆட்­சி­ய­மைப்போம் எனக் கூறும் கோத்­தா­பய அணி­யுடன்  தமிழ், முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவில் வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எவ்­வாறு கைகோர்க்க முடியும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கேள்­வி­யெ­ழுப்­பினார்.  பொது­ஜன முன்­ன­ணி­யினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தலை­மைத்­து­வ­மாக கொண்டு முன்­னோக்கி செல்ல தயா­ராக இல்லை. இந்த காலப்­ப­கு­தி­யுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சி­யலை ஓரங்­கட்டி மீண்டும் ராஜபக் ஷ யுகத்தை உரு­வாக்­கவே பொது­ஜன பெர­மு­ன­வினர் தீர்­மா­னித்­துள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன்  நாம் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஆட்­சியை உரு­வாக்­கினோம். ஜன­நா­யக ரீதியில் சரி­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆட்­சியில் இடை­ந­டுவே சில முரண்­பா­டுகள் ஏற்­பட்டு ஜனா­தி­பதி இணை­யக்­கூ­டாத கூட்­ட­ணியில் இணைந்து இன்று அவர் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்ளார்.  ஆனால் இந்த முரண்­பா­டுகள் அனைத்­திற்கும் ஜனா­தி­ப­தியின் தவ­றான புரி­தலே கார­ண­மாகும். இதனை சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்ட பொது­ஜன முன்­ன­ணி­யினர் இன்று அவர்­களின் கரம் ஓங்­கி­யுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஓரங்­கட்ட தீர்­மா­னித்­துள்­ளனர்.

பொது­ஜன பெர­மு­ன­வினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கே தாக்­குதல் நடத்­து­கின்­றனர். ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ என்­பதை கூறி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முழு­மை­யாக வீழ்த்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சி­யாக நாமும் ஜனா­தி­ப­தியை தாக்க தயா­ராக இல்லை. அவர் நெருக்­க­டியில் உள்ளார், எனவே அவ­ருக்கு கைகொ­டுக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். எம்­முடன் ஜனா­தி­ப­தியை இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க நாம் தயார். ஜனா­தி­பதி மீண்டும் எம்­முடன் இணைய வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பலர் தயா­ராக உள்­ளனர். எனவே  இப்­போது தீர்­மானம் ஜனா­தி­ப­தியின்  கைகளில் உள்­ளது.

அதேபோல் கோத்­தா­பய ராஜபக் ஷ தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் ஜனா­தி­ப­தி­யாவேன்  என இப்­போது தெளி­வாக கூறு­கின்றார். அப்­ப­டி­யென்றால் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்­களின் வாக்­குகள், அவர்­களின் உரி­மைகள் என்­ன­வாகும். இவ்­வாறு கூறும்­போதே அவர் தமிழ் மக்­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்றார். அவ்­வா­றான ஒரு அணியில் ஜனா­தி­பதி எவ்­வாறு தொடர்ந்தும் இணைந்து செயற்­பட முடியும். தாம் சிங்­கள வாக்­கு­களை விடவும் முழு­மை­யான தமிழ் முஸ்லிம் வாக்­கு­களை  பெற்றவர் என்பதை ஜனாதிபதி ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் எம்முடன் இணைந்தால் அவருடன் பயணிக்க நாம் தயார். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு  என்பதை நாம் கவனத்தில் கொண்டு செயற்பட்டு  வருகின்றோம். இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.