எனது குடும்பத்தை பழிவாங்கவே 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

0 577

என்­னையும், எனது குடும்­பத்­த­வர்­க­ளையும் பழி­வாங்கும் நோக்­கி­லேயே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை கொண்­டு­வந்து, ஜனா­தி­ப­தி­யையும் ஏமாற்றி அதனை நிறை­வேற்றிக் கொண்­டார்கள். பாரா­ளு­மன்­றத்தில் தவ­றான சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டால், அதற்கு அமை­வா­கவே நீதி­மன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அளு­போ­முல்ல எஸ்.மஹிந்த வித்­தி­யா­ல­யத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

என்­னையும், எனது குடும்­பத்­த­வர்­க­ளையும் பழி­வாங்கும் நோக்­கி­லேயே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை கொண்­டு­வந்து, ஜனா­தி­ப­தி­யையும் ஏமாற்றி அதனை நிறை­வேற்றிக் கொண்­டார்கள். அத­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்குக் காணப்­பட்ட உரி­மை­யையும் பறித்­துக்­கொண்­டார்கள். பாரா­ளு­மன்­றத்தில் தவ­றான சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டால், அதற்கு அமை­வா­கவே நீதி­மன்றம் தீர்ப்பு வழங்கும்.

அதே­போன்று தற்­போ­தைய அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய பண்­புகள் எவை­யெனெ அறி­யாத ஓர் அர­சாங்­க­மாகும். மாகா­ண­சபைத் தேர்­தல்­களை இன்னும் எத்­தனை வரு­டங்­களில் நடத்­து­வார்கள் எனத் தெரி­ய­வில்லை. அந்­த­வ­கையில் மக்­களின் வாக்­க­ளிக்கும் உரி­மைக்கும் தடை­யேற்­ப­டுத்தி இருக்­கின்­றார்கள். பிறர் தவ­றி­ழைப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டி­ய­வாறு இந்த அர­சாங்­கமே தவ­றி­ழைக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் வரவு – செல­வுத்­திட்­டத்தில் ஒரு பகு­தியை எமது இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தோற்­க­டித்­துள்­ளனர். நாங்கள் இந்த அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்த இரண்­டா­வது சந்­தர்ப்பம் இது­வாகும். அதற்கு முன்னர் 52 நாட்­க­ளுக்கு இவ்­வ­ர­சாங்­கத்தை பத­வி­யி­லி­ருந்து இறக்­கி­யி­ருந்தோம். அதுவும் எம்­மு­டைய வெற்­றி­யென்றே கூற­வேண்டும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தான் மக்­க­ளுக்கு மிகவும் நெருக்­க­மான கட்­ட­மைப்­பாகும். கிரா­ம­மொன்றின் அனைத்து வேலைத்­திட்­டங்­களும் அதனையே சார்ந்திருக்கும். எம்முடைய ஆட்சிக்காலத்தில் பெருமளவான நிதியை பிரதேச சபைகளுக்குப் பெற்றுக்கொடுத்தோம். கிராம அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கினோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.