கிழக்கில் இராணுவ வசமிருந்த ஐந்தரை ஏக்கர் காணி விடுவிப்பு

0 805

கிழக்கு மாகா­ணத்தில் இரா­ணுவ வச­மி­ருந்த  5.5 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. யுத்த காலத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வச­மி­ருந்த காணி­களைக் கைய­ளிப்­ப­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லக வளா­கத்தில்   நேற்­றைய தினம்   நடை­பெற்­றது.

இதன்­போது, இரா­ணுவ பாது­காப்பு நோக்­கத்­துக்­காகபயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த  5.5 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் அருண ஐய­சே­க­ர­வினால்  கிழக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் குச்­ச­வெளி திரி­யாயில்  3 ஏக்கர் காணியும், அம்­பாறை மாவட்­டத்தில்  பெரிய நீலா­வ­ணையில் 0.5  ஏக்கர் காணியும் , திருக்­கோவில் பகு­தியில் 2 ஏக்கர் காணியும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிகழ்வில் திணைக்­களத் தலை­வர்கள், கிழக்கு மாகாண அமைச்­சுக்­களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள்  என பலர் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.