எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக நஹியா நியமனம்

0 634

தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக ஒய்­வு­பெற்ற இலங்கை நிர்­வா­க­சேவை அதி­கா­ரி­யான ஏ.எம்.நஹியா அர­சி­ய­ல­மைப்பு  பேர­வையின் விதந்­து­ரை­யின்­பேரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இந்த நிய­மனம் மார்ச் 11 ஆம் திக­தி­யி­லி­ருந்து நடை­மு­றைக்கு வரும்­வ­கையில் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பொது­நி­ரு­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­கு­ழு­விலும் உள்­ளூ­ராட்சி,  மாகா­ண­ச­பைகள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­கு­ழு­விலும் ஏற்­கெ­னவே உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றிய நஹியா எல்லை நிர்­ணய விவ­கா­ரங்­களில் மிகுந்த அனு­ப­வ­மு­டை­யவர். அர­ச­சே­வையில் பணி­யாற்­றிய காலத்தில் புனர்­வாழ்வு பணிப்­பாளர் நாய­க­மா­கவும் மீனவர் வீட­மைப்பு மற்றும் மீனவர் நலன் பணிப்­பாளர் நாய­க­மா­கவும் தேசிய நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு அமைச்சின் நிபு­ணத்­துவ ஆலோ­ச­க­ரா­கவும் அதற்கு முதல் கொழும்பு ஸாஹிரா கல்­லூரி உப அதி­ப­ரா­கவும் இந்து சமய கலா­சார இரா­ஜாங்க அமைச்சின் தமிழ் அலு­வல்கள் உத­விப்­ப­ணிப்­பா­ள­ரா­கவும் நஹியா முக்­கிய பத­வி­களை வகித்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பழைய மாணவர் சங்­கத்தின் தற்­போ­தைய பொரு­ளா­ள­ரான இவர் இலங்கை முஸ்லிம் கல்­விச்­சேவை சகா­ய­நி­தியின் நம்­பிக்­கை­யாளர் சபை­யி­னதும் அதன்­நி­ரு­வாக சபை­யி­னதும் அங்­கத்­த­வ­ரா­கவும் கலா­நிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் பவுண்­டே­சனின் உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்­று­கிறார். அத்­துடன் கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்தி நிதியம் (CDDF) இன் முக்­கி­யஸ்­த­ரா­கவும் உள்ளார். நஹி­யாவின் பணி­களைப் பாராட்டி கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் கடந்த வருட இறுதியில் விருது வழங்கி கௌரவித்தது. இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தத்துவமாணிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.