ஈராக் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி

0 757

ஈராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 100 பேர் பலி­யா­ன­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர்­களில் பெரும்­பா­லானோர் குழந்­தைகள் மற்றும் பெண்­க­ளாவர்.

இது கு­றித்து ஊட­கங்கள் தரப்பில், ஈராக்கின் வடக்குப் பகு­தியில் உள்ள மொசூல் நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை பிர­பல சுற்­றுலாப் பகு­தி­யாகக் கரு­தப்­படும் திக்ரீஸ் நதிக்கு அருகில் குர்திஷ் புத்­தாண்டை சிறிய அள­வி­லான கப்பல் ஒன்றில் மக்கள் கொண்­டா­டினர்.

கொண்­டாட்­டத்தின் போது திடீ­ரென விபத்து ஏற்­பட்­டதில் கப்பல் கவிழ்ந்­தது. இதில் மூழ்கி 100 பேர் பலி­யா­கிய போதிலும் 50 ற்கும் மேற்­பட்­ட­வர்கள் மீட்­கப்­பட்­டனர். மீட்­கப்­பட்­ட­வர்­களில் பலர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

கப்­பலின் கொள்­ள­ளவை விட அதி­க­மான நபர்­களை ஏற்­றி­யதே விபத்­துக்குக் காரணம் என்று செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்த விபத்தை நேரில் சென்று பார்­வை­யிட்ட ஈராக் பிர­தமர் அடெல் அப்தெல் மஹ்தி கூறும்­போது, ”மூன்று நாட்கள் தேசம் முழு­வதும் துக்க தின­மாக அனு­ஷ்டி­க்­கப்­படும்” என்றார்.

இந்த கப்­பலில் 200 ற்கும் மேற்­பட்டோர் இருந்­துள்­ளனர். அருகில் இருந்­த­வர்கள் மற்றும் மீட்பு படை­யினர் விரைந்து வந்து அவர்­களை காப்­பாற்றும் முயற்­சியில் ஈடு­பட்­டனர்.

இதில் 94 பேர் சட­லங்­க­ளாக மீட்கப்பட்டதுடன் மேலும் 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களுள் 19 பேர் குழந்தைகளாவர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.