அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

புத்தளம் பெரிய பள்ளிவாசல் கண்டனம்

0 736

ஜனாதிபதியின் புத்தளம் நகர விஜயத்தோடு இணைந்ததாக ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை கோரி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள்மீது பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எமக்கு மிகவும் வேதனையைத் தருகின்றதென புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இன, மத, பால் வேறு­பா­டின்றி பல தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் எதிர்­கால சந்­த­தியை பாது­காக்கும் போராட்­டத்தில் இணைந்­துள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான புத்­தளம் மக்­களின் உணர்­வு­களை அர­சாங்­கமும், அர­சியல் பிர­மு­கர்­களும், உயர் பீடங்­களும் கவ­னத்­தி­லெ­டுக்க வேண்டும் என்­பதே புத்­தளம் சிவில் தலை­மை­களின் எதிர்­பார்ப்­பாகும்.

இத்­த­கைய அசம்­பா­வி­தங்கள் மற்றும் சமூ­கத்தை அழிக்­கக்­கூ­டிய திட்­டங்­க­ளி­லி­ருந்து எமது ஊரையும் எமது சமூ­கத்­தையும் பாது­காக்க அல்­லாஹ்­விடம் உளத்­தூய்­மை­யோடும், இறை­யச்­சத்­து­டனும் துஆக்­களில்  ஈடு­ப­டுவோம். அசம்­பா­வி­தங்­களில் காயப்­பட்ட, வேத­னைப்­பட்ட, சட்ட சிக்­கல்­ளுக்கு உட்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு அல்­லா­ஹு­த­ஆலா உடல் மற்றும் உள சுகத்தை தர நாம் அனை­வரும் பிரார்த்­திப்போம்.

சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் சிக்­கல்­களை உரு­வாக்க நினைக்கும் சில தீய­சக்­தி­களின் முயற்­சியில் சிக்கிக்­கொள்­ளாத வகையில் பொதுமக்கள் இந்நாட்களில் சமயோசிதமாக செயற்படுமாறு வினயமாக வேண்டிக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.