நாட்டில் வறட்சி நீங்க பிரார்த்தனை புரிவோம்

ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

0 617

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் உலமா சபையின் பிரசாரக் குழு செயலாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளியிட்டுள்ளஅறிக்­கையில் மேலும் தெரி­விக்கப்பட்­டுள்­ள­தா­வது, நாடு வறட்­சி­யினால் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மனி­தர்­களும், ஏனைய ஜீவ­ரா­சி­களும் தண்­ணீரைப் பெற்­றுக்­கொள்ள மிகவும் சிர­மப்­படும் நிலை தேன்­றி­யுள்­ளது. இது போன்ற சந்­தர்­ப்பங்­களில் நாம் அல்­லாஹ்­விடம் மன்­றாடி அவ­னு­டைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்­களை மன்­னித்து அருள் புரியும் வல்­லமை அல்லாஹ் ஒரு­வ­னுக்கே உரி­யது.

அசா­தா­ரண நிலை­மைகள் ஏற்­படும் போதெல்லாம் நாம் எமது அன்­றாட வாழ்வின் நடை­மு­றை­களை மீள் பரி­சீ­லனை செய்து திருத்திக் கொள்­வதும் அதி­க­மாக இஸ்­திஃபார் செய்­வதும் நபி வழி­யாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்­னிக்­கப்­பட்டு அல்­லாஹ்வின் அருள் இறங்­கலாம். தண்ணீர் நமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாகும். அது இல்­லாமல் போவதால் அல்­லது குறைந்து விடு­வதால் மக்கள் படும் வேத­னையை நாம் அறிவோம். எனவே, பாவங்­க­ளுக்­காக தௌபா செய்­வ­துடன் வறட்­சி­நீங்கி மழை­பொ­ழிய சகல முஸ்­லிம்­களும் பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­மாறும், பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் பொறுப்­பாக உள்­ள­வர்கள் மழை தேடித் தொழும் தொழு­கையை நடாத்­துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்­களை ஓதுதல் போன்­ற­வற்­றுக்கு ஏற்பாடுகளை செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.