பாகிஸ்தானில் தேவாலயம் எரிக்கப்பட்டதாக வதந்தி

0 812

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நியூ­சி­லாந்­தி­லுள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் நடை­பெற்ற துப்­பாக்கி தாக்­கு­த­லுக்கு பதி­லடி வழங்கும் வகையில், பாகிஸ்­தானில் இஸ்­லா­மி­ய­வா­திகள் தேவா­லயம் ஒன்றைத் தீயிட்டு கொளுத்­தி­ய­தாக சமூக ஊட­கங்­களில் வைர­லாக செய்தி பரவி வரு­கி­றது.

வெள்­ளை­யின மேலா­திக்­க­வாத அவுஸ்­தி­ரே­லியர் ஒருவர் இரண்டு பள்­ளி­களில் தொழுகை மேற்கொண்ட 50 முஸ்­லிம்­களை துப்­பாக்­கியால் சுட்டு கொன்­ற­தோடு, அந்த கொடூ­ரத்தை சமூக ஊட­கங்­களில் நேர­லையில் ஒளி­ப­ரப்­பினார்.

இதற்குப் பதி­லாக நடத்­தப்­பட்­ட­தாக கூறி பகி­ரப்­படும் தேவா­லய எரிப்புக் காணொலியில் முக்­கிய கட்­ட­டத்தில் சிலர் ஏறு­வது தெரி­வ­தோடு, காணொ­லியின் முடிவில் கிறிஸ்­தவ அடை­யாளப் பொரு­ளொன்றை அவர்கள் உடைப்­பதும் தெரி­கி­றது.

மக்கள் கத்­து­வ­தையும் இந்த காணொலியில் கேட்க முடி­கி­றது. இதன் ஒரு பகு­தியில். இந்த தேவா­ல­யத்தை சுற்றி புகை­யையும் காண முடி­கி­றது.

ஆனால், நியூ­சி­லாந்து தாக்­கு­த­லுக்கு பதி­லடி வழங்கும் வகையில், பாகிஸ்­தானில் தேவா­லயம் கொளுத்­தப்­பட்­ட­தாக பரவி வரும் செய்தி பொய் என்­பது செய்­தி­களில் இருந்து தெரிய வந்­துள்­ளது.

அதி­க­மானோர் கொல்­லப்­பட்ட இந்த தாக்­கு­த­லுக்கு பழி­வாங்­கப்­பட்­ட­தாக கூறி, அதற்கு சான்­றாக 30 வினா­டி­களே இருக்கும் இந்த ‘தேவா­லய எரிப்பு’ காணொலி பகி­ரப்­ப­டு­கி­றது.

ஆனால், இந்த காணொலி பாகிஸ்­தானை சேர்ந்­த­தல்ல. இது எகிப்தை சேர்ந்­தது என்­பது தெரிய வந்­தது. இந்த காணொலி 2013 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள காப்டிக் தேவா­ல­யங்­களில் நடந்த தாக்­கு­தலின் போது எடுக்­கப்­பட்­ட­தாகும்.

எகிப்தில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை தோன்றிய போது, தீ வைத்து எரித்தோரால் எகிப்து முழுவதும் குறைந்தது 25 தேவாலயங்கள் தாக்கப்பட்ட போது 2013 ஆகஸ்ட் மாதம் இந்த காணொலி எடுக்கப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.