அர­சி­யல்­வா­திகள், கடத்­தல்­கா­ரர்­களால் நாட்டில் வன­வளம் அழிக்­கப்­பட்­டுள்­ளது

கடு­மை­யாக சாடு­கிறார் ஜனா­தி­பதி மைத்­திரி

0 674

வடக்கு, கிழக்கில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக வன­வளம் பாது­காக்­கப்­பட்­டன. யுத்தம் இடம்­பெ­றாத ஏனைய பிர­தே­சங்­களில் அர­சி­யல்­வா­திகள் மற்றும் கடத்­தல்­கா­ரர்­க­ளினால் வன­வளம் அழி­வுக்­குள்­ளாகி இருக்­கி­ற­தென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

இதே­வேளை, வன­வளம் உட்­பட தாவ­ரங்கள் மற்றும் உயி­ரி­னங்­களின் பாது­காப்­பிற்கும் அர­சாங்­கத்தைப் போன்றே அனைத்து பிர­ஜை­களும் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளாவர். நாட்டின் வன வளத்தை பாது­காப்­ப­தற்­காக அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, எதிர்­பார்க்­கப்­படும் வன அடர்த்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக விரி­வா­ன­தொரு நிகழ்ச்­சித்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

நேற்று திம்­பு­லா­கலை வெஹெ­ர­கல மகா வித்­தி­யா­ல­யத்தில் சர்­வ­தேச வன பாது­காப்பு தினத்தை முன்­னிட்டு இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி  இதனைத் தெரி­வித்தார். பாட­சா­லையில் புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்ள வகுப்­பறை கட்­டி­டத்­தையும் ஜனா­தி­பதி  மாண­வர்­க­ளிடம் கைய­ளித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் தற்­போ­துள்ள வன அடர்த்­தியை பாது­காப்­ப­தற்கு அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டா­விட்டால் இன்னும் சுமார் 15 ஆண்­டு­களில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்­டி­யி­ருக்கும். நாட்டின் எஞ்­சி­யுள்ள 28% வீத வன அடர்த்­தியில் பெரு­ம­ளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே உள்­ள­துடன், அப்­பி­ர­தே­சங்­களில் இடம்­பெற்ற எல்.ரி.ரி.ஈ. பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக வன வளம் பாது­காக்­கப்­பட்­டது. யுத்தம் இடம்­பெ­றாத ஏனைய பிர­தே­சங்­களில் அர­சி­யல்­வா­திகள் மற்றும் கடத்­தல்­கா­ரர்­க­ளினால் வன­வளம் அழி­வுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

அர­சாங்கம் எதிர்­வரும் மூன்று ஆண்­டு­களில் அடைந்­து­கொள்ள எதிர்­பார்க்கும் நாட்டின் வன அடர்த்­தியை 32% வீத­மாக அதி­க­ரிக்கும் நிகழ்ச்­சித்­திட்­டத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு 1,48000 ஹெக்­டெ­யார்­களில் புதி­தாக மர­ந­டுகை செய்­யப்­பட வேண்­டி­யுள்­ள­துடன், இதில் வருடம் ஒன்­றுக்கு 15,000 ஹெக்­டெ­யர்­களில் மரங்கள் நடப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும் இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் மற்றும் தனி­யார்­துறை, அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பாட­சாலை பிள்­ளைகள் உள்­ளிட்ட அனைத்து பிர­ஜை­களும் ஒன்­றி­ணைய வேண்டும் என்றார்.

சுற்­றா­டல்­துறை இரா­ஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டப்ளியு.ஏ.சீ.வேரகொட ஆகியோரும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.