நியூஸிலாந்தில் தானியக்க துப்பாக்கிகளுக்குத் தடை

0 674

கிறிஸ்ட் சர்ச் துப்­பாக்கிச் சூட்டை தொடர்ந்து செமி தானி­யக்க துப்­பாக்­கி­களை நியூ­ஸி­லாந்து அரசு தடை செய்ய உத்­த­ர­விட்­டுள்­ளது.

நியூ­ஸி­லாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்­ளி­வாசல் மற்றும் லின்­வுடன் பள்­ளி­வா­ச­லிலும் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை அன்று முஸ்­லிம்கள் ஜும்ஆ தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த போது துப்­பாக்­கி­தாரி ஒரு­வரால் துப்­பாக்கிச்­சூடு நடத்­தப்­பட்­டது. இதில் 50 பேர் பலி­யா­கினர்.

இந்தத் துப்­பாக்கிச் சூட்டில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான பிரெண்டன் டொரன்ட் கைது செய்­யப்­பட்டு அவ­ரிடம் விசா­ரணை நடந்து வரு­கி­றது.

இந்­நி­லையில்  இந்த சம்­ப­வத்தில் கிறிஸ்ட்சர்ச் துப்­பாக்கிச் சூட்டில் கொலை­யாளி பயன்­ப­டுத்­திய செமி தானி­யக்க துப்­பாக்கி  மற்றும் ரைபில் ரக துப்­பாக்­கி­களை  கடு­மை­யான துப்­பாக்­கி­க­ளுக்­கான விதி­க­ளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்­வ­தாக  நியூ­ஸி­லாந்து அறி­வித்­துள்­ளது.

இது குறித்து நியூ­ஸி­லாந்து பிர­தமர்  ஜேசிந்தார் ஹர்டன் கூறும்­போது, “ கிறிஸ்ட்சர்ச் துப்­பாக்கிச் சூடு ஆறு நாட்கள் கடந்த நிலையில்  நியூ­சி­லாந்தில் செமி தானி­யக்க மற்றும் ரைபில் ரக துப்­பாக்­கி­களை தடை செய்­வ­தாக அறி­விக்­கிறோம்.

மார்ச் 15 ஆம் தேதி நமது வர­லாற்­றையே மாற்றி அமைத்­தி­ருக்­கி­றது. இனி நமது துப்­பாக்கி சட்­டங்கள் நாட்டை  பாது­காக்கும்  என்­பதை நியூ­ஸி­லாந்து மக்கள் சார்­பாக அறி­விக்­கிறேன்” என்றார்.

புதிய துப்பாக்கி சட்டங்கள் ஏப்ரல் 11 முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.