‘இராஜினாமா’ சலசலப்புகளுக்கு அஞ்சப் போவதில்லை

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா கூறுகிறார்

0 737

எமது தேசிய காங்­கிரஸ் கட்சி உண்­மையின் பக்கம் நின்று செயற்­படும் கட்­சி­யாகும். இக்­கட்­சியில் இருக்கும் எவ­ருக்கும் நாம் ஒரு சத­வீ­த­மேனும் துரோகம் இழைக்­க­வில்லை.

இக்­கட்­சியில் இருந்து சிலர் தமது தேவைக்­காக வெளி­யே­றி­விட்டு கட்­சியில் இல்­லாத பத­வி­க­ளி­லி­ருந்தும் கட்­சியில் இல்­லா­த­வர்­க­ளையும் கொண்டு இரா­ஜி­னாமா செய்­கின்றேன் என இல்­லாத ஒன்றை இருப்­ப­தாக மக்­க­ளுக்கு காட்ட முனை­கின்­றார்கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கெல்லாம் நாம் ஒரு­போதும் அஞ்­சி­விடப் போவ­தில்லை.

காற்று வீசு­கி­ற­போது பறக்­கின்ற பத­ர்­களை எண்ணி நாம் ஒரு­போதும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை என முன்னாள் அமைச்­சரும் தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்லா தெரி­வித்தார்.

தேசிய காங்­கிரஸ் கட்­சியின் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச விஷேட மத்­திய குழுக் கூட்டம் நேற்று (20) அட்­டா­ளைச்­சேனை மீலாத்­நகர் பிர­தே­சத்தில் இடம்­பெற்­ற­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், எமது கட்­சி­யி­லி­ருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உது­மா­லெவ்­வையும், கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களும் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தாக சொல்­கின்­றார்கள். ஆனால் தேசிய காங்­கிரஸ் கட்­சிக்­கா­ரர்கள் ஒரு­சி­லரைத் தவிர எல்­லோ­ருமே எம்­மு­ட­னேயே இருக்­கின்­றார்கள். உது­மா­லெவ்­வையின் சகோ­த­ரரும் உது­மா­லெவ்­வை­யுமே இப்­போது எமது கட்­சியில் காண­வில்லை. ஆனால் பல கார­ணங்­க­ளுக்­காக வெளி­யே­றி­ய­வர்­களும், புதி­ய­வர்­களும் இப்­போது எமது கட்­சிக்குள் வந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது எமது கட்­சிக்கு சற்று மழை அடித்­தது. அந்த மழையில் நனைந்த சில பத­ர்கள் நீரைக் குடித்துக் கொண்டு தானும் நல்ல நிலை­யி­லுள்ள நெல்லைப் போல் காட்சி தந்­தது.

பின்னர் வெயில் அடித்­தது. அந்த வெயிலில் காய்ந்த பத­றுகள் காற்றில் பறக்கத் தொடங்­கி­ன.

பதர்கள் காற்­றுக்கு நிலை­யாக நிற்க முடி­யாமல் பறப்­பதை எண்ணி நாம் ஒரு­போதும் பெரி­தாக நினைக்க முடி­யாது.

அர­சியல் என்­பது அதி­காரம் எடுப்­ப­தற்­காக என்று சில கூட்டம் எம்முள் கூறிக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டு அலைந்­தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப்  எவ்­வித அர­சியல் அதி­காரம் இல்­லா­தி­ருந்­த­போ­திலும் சாதா­ரண ஒரு மனி­த­ராக மட்­டுமே இருந்­து­கொண்டு நாட்­டுக்குப் பல விளக்­கங்­களைச் சொன்னார்.

அதேபோல் தேசிய காங்­கிரஸ் கட்சி அமைச்­சுக்­களை வைத்துக் கொண்டும், அதி­காரம் அற்­ற­போதும் நாட்­டுக்கு பல செய்­தி­களைச் சொல்­லிய வர­லா­று­களை நாம் ஒரு­போதும் மறந்­து­விட முடி­யாது.

ஏதோ கார­ணத்­திற்­காக நாம் அதி­கா­ரத்­தினை இழந்­த­போ­திலும் நம்மில் உண்­மையும் நேர்­மையும் இருப்­பதை மக்கள் நன்­றாக விளங்கி வைத்­தி­ருக்­கின்­றார்கள். இதனால் மக்கள் நம்மை நிச்­சயம் நேசிப்­பார்கள்.

நமக்கும் வெற்றி வரும். அர­சியல் கட்­சி­யொன்றை வைத்துக் கொண்டு உண்­மை­களை உரத்துச் சொல்­வதும் ஓர் அர­சியல் அதி­காரம்  என்­பதை எல்­லோரும் நன்கு விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

எமது தேசிய காங்­கிரஸ் கட்சி குறித்த இலக்­குடன் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. குறித்த ஓர் இலக்­கு­டனும் இலட்­சி­யத்­து­டனும் தேசிய காங்­கிரஸ் கட்சி நடை­போ­டு­கி­றது என்­ப­தற்­காக தேசிய காங்­கிரஸ் கட்­சி­யினை வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக சில தரப்­பினர் சதி­மு­யற்­சி­களில் ஈடு­படத் தொடங்­கி­யுள்­ளனர்.

அதா­உல்லா கடந்த காலங்­களில் கூறி­ய­தெல்லாம் இப்­போது நடக்­கின்­ற­தென்று மக்கள் தற்­போது உணரத் தொடங்­கி­யுள்­ளார்கள். கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவர் தலை­மை­வ­கித்து கிழக்கு மண்ணைப் பாது­காக்க கூடாது என்­ப­தற்­காக குறிப்­பிட்ட ஒரு தரப்­பி­னரால் வேண்­டு­மென்றே அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப சில சதி­மு­யற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அந்த சதி முயற்­சி­களின் ஒரு கட்­ட­மா­கவே கடந்த பொதுத் தேர்­த­லின்­போது எமது தேசிய காங்­கிரஸ் கட்­சி­யி­லி­ருந்து எவரும் பாரா­ளு­மன்றம் செல்லக் கூடா­தென்று பல சக்­திகள் ஒன்று சேர்ந்து உழைத்து எமது கட்­சி­யினை தோற்­க­டித்­தன.

யார் என்ன சதி செய்த போதிலும் நாம் அதி­காரம் இருக்­கின்­ற­போது எவ்­வாறு செயற்­பட்­டோமோ அதே­போல்தான் அதி­காரம் எம்­மிடம் இல்­லா­த­போதும் மக்கள் நல­னுக்­காக குரல் கொடுத்து வரு­கின்றோம்.

எமது உண்­மைத்­தன்­மையின் நிலைப்­பாட்­டினைப் புரிந்து எமது கட்­சி­யினை அழித்­து­விட முடி­யாது என்று புரிந்­து­கொண்ட சிலர் தற்­போது கார­ணமே இல்­லாத சில பிரச்­சி­னை­களை கட்­சிக்­குள்­ளி­ருந்து தோற்­று­வித்து கட்­சி­யினை அழித்­து­விடும் முயற்­சி­க­ளுக்­காக சில­ரது மன­நி­லை­களில் மாற்­றங்­க­ளையும் தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளையும் தோற்­று­விக்க முனை­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­மை­களை அறிந்த எமது கட்­சிக்­கா­ரர்கள் பலர் உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்­றனர்.

அவர்கள் இருக்கும் வரை எந்த சக்­தி­யாலும் எமது கட்­சி­யினை அழித்­து­விட முடி­யாது.

எமது சுய­நல இலா­பங்­க­ளை­யெல்லாம் தூக்­கி­யெ­றிந்து விட்டு மறைந்த தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்­ரஃபின் கொள்­கை­யினை முன்­னி­லைப்­ப­டுத்தி நாம் தேசிய காங்­கி­ரஸை எப்­போது உரு­வாக்­கி­னோமோ அப்­போ­தி­லி­ருந்து நாடு செழித்­தது, வடக்கு கிழக்கு பிரிந்­தது.

யுத்தம் நிறுத்­தப்­பட்­டது, நாம் வீடு­க­ளிலே நிம்­ம­தி­யாக நித்­திரை செய்­வ­தற்­கான சூழல் ஏற்பட்டது.

நமது நாட்டை இன்று நமது நாட்டு மக்கள் ஆளவில்லை. நமது தலைவர்களால் நமது நாடு ஆளப்படவுமில்லை. நமது நாட்டின் ஜனாதிபதிகூடச் சொல்கின்றார் வெளிநாட்டுத் தூதரகங்களில் சிலர் இருந்து கொண்டு நமது நாடு ஆளப்படுகிறதென்று. ஏற்கனவே நமது நாடு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டாயிற்று.

வேண்டிய நாடுகள் இலங்கையில் வேண்டிய இடங்களுக்கு வர முடியும். நமது நாட்டையும் சமுதாயத்தினையும் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு நம் மத்தியில் சில கூட்டம் ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.