போதைப்பொருள் கடத்தலில் இலங்கையே முக்கிய கேந்திர நிலையம்

0 982
  • ஸீனியா  முஸாதிக்

ஒருவர் திடீ­ரெனப் பணம் படைத்­த­வ­ராக மாறி­விட்டால் அவர் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­கின்­றாரோ என்ற சந்­தேகம் நமக்கு ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. ஏனெனில், குறு­கிய காலப்­ப­கு­தியில் கோடிக்­க­ணக்­கான ரூபாக்­களை உழைக்­கக்­கூ­டிய ஒரு வர்த்­தகம் என்றால் அது போதை­பொருள் வியா­பா­ரம்தான்.

2018 இன் இறு­தி­தி­னத்தில் அனை­வரும் புத்­தாண்டை வர­வேற்க காத்­து­நிற்கும் தறு­வா­யில் பொலிஸ் போதைத்தடுப்பு பணி­யகம் (PNB) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) பிரி­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பி­னூ­டாக இலங்கை வர­லாற்­றிலே அதி­கூ­டிய ஹெரோயின் 278 கிலோ­கிராம் மற்றும் 3336 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான போதைப்­பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இக்­குற்­றம்­தொ­டர்­பாக பங்­க­ளாதேஷ் நாட்டை சேர்ந்த இரு நபர்கள் கைதா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­க­பேச்­சாளர் ருவன் குண­சே­கர ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், ‘இந்த ஹெரோ­யின் கேக் பெட்­டி­களில் அடைக்­கப்­பட்டு பய­ணப்­பை­களில் நிரப்­பப்­பட்­ட­நி­லையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது. மற்றும் இப்­போ­தைப்­பொருள் கண்­டெ­டுக்­கப்­பட்ட வீடா­னது மிகவும் பாது­காப்­பா­ன­தா­கவும் முழு இலங்­கைக்கும் விநி­யோ­கிக்­கப்­படும் இட­மாகும்’ என அவர் தெரி­வித்தார்.

இதற்கு முன்னர் இலங்­கையில் அதி­கூ­டிய  ஹெரோயின் தொகை­யாக  2003ஆம் ஆண்டு  கைப்­பற்­றப்­பட்ட 261 கிலோ­கிராம் பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்­பொருள் பதி­வாகி இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

போதைப்­பொ­ருட்கள் கடத்­தலில் இலங்கை ஒரு முக்­கிய கேந்­திர நிலை­ய­மாக விளங்­கு­கி­ற­துடன், பாகிஸ்தான் மற்றும் இந்­தி­யா­வி­லி­ருந்து கடத்தல் மூலம் கொண்­டு­வ­ரப்­படும் போதைப்  பொருட்கள் கொழும்பு துறை­முகம் மற்றும் விமான நிலை­யத்தின் ஊடாக  ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு கடத்­தப்­ப­டு­கின்­றன.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரை 383 வெளி­நாட்டு நபர்கள் போதைப்­பொ­ருட்கள் கடத்த முயற்­சிக்­கையில் இலங்­கையில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

2017  ஆம் ஆண்டில் அதி­க­மாக  பாகிஸ்­தா­னி­லி­ருந்து கடல் மற்றும் ஆகாய மார்க்­க­மா­கவும் கடத்தல் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்­றுள்­ளன.

குறிப்­பிட்­ட­ளவு ஹெரோயின் போதைப்­பொ­ருளை நன்கு கடத்­தலில் தேர்ச்­சி­பெற்ற ஒரு­வரின் மூலம் உடலில் மறைத்தோ அல்­லது வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயன்­றுள்­ளனர். பெரி­ய­ள­வி­லான ஹெரோயின் போதைப்­பொருள் இலங்­கைக்கு மீன­வர்கள் மூலம் கடல் மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. 2017 இல் சிலாபம் பொலி­ஸா­ரினால் அதி­கூ­டிய தொகையைக் கொண்ட 211kg 815g ஹெரோயின்  கைப்­பற்­றப்­பட்­ட­தென பொலிஸ் 2017 ஆம் ஆண்டு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறை­மு­கத்­திற்கு வந்த கப்­ப­லொன்­றி­லி­ருந்து பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்ட 928 கிலோ­கிராம் கொகெய்ன் போதைப்­பொ­ருளின் மதிப்பு இலங்கை ரூபாயில் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­டு­நா­யக்க முத­லீட்டு அபி­வி­ருத்தி சபை வளா­கத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு முன்­பாக 2018.01.15 ஆம் திகதி இந்த கொகெய்ன் போதைப்­பொருள் அழிக்­கப்­பட்­டது.

கைப்­பற்­றப்­பட்ட பெருந்­தொகை மதிப்­புள்ள போதைப்­பொருள் பகி­ரங்­க­மாக அழிக்­கப்­படும் முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வென ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது.

உலகின் மிக மோச­மான பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் போதை­பொருள் வர்த்­தகம் இலங்­கையின் ஊடா­கவே நடை­பெ­று­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இலங்­கைக்குள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தே போதைப் பொருட்கள்  குறிப்­பாக ஹெரோயின், பிரவுண் சுகர் போன்­றவை கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இவற்றை கடல் அல்­லது ஆகாய மார்க்­க­மா­கவே கொண்­டு­வர வேண்டும். அதற்கு கட்­டு­நா­யக்க விமான நிலையம் அல்­லது கொழும்புத் துறை­மு­கமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இலங்­கையைச் சுற்­றிய கடற்­ப­கு­திகள் கடற்­ப­டை­யி­னரின் தீவிர கண்­கா­ணிப்பில் இருப்­பதால் பட­குகள் மூலம் கொண்­டு­வ­ரு­வது சாத்­தி­ய­மில்லை. எனவே கட்­டு­நா­யக்க விமான நிலையம் அல்­லது கொழும்­புத்­து­றை­முகம் ஊடா­கவே போதைப் பொருட்கள் இலங்­கையை வந்­த­டை­கின்­றன.

போதைப்­பொருள் கடத்­த­லுக்­காக மரண தண்­ட­னையை உல­கி­லுள்ள நாடுகள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. இவற்றில் இலங்­கையும் உள்­ள­டங்கும். இலங்­கை­யிலும் 2008 ஆம் ஆண்டு முதல் போதைப்­பொருள் குற்­றங்கள் தொடர்­பி­லான கைதுகள் அதி­க­ரித்து வந்­தி­ருக்­கின்­றன.

இத­ன­டிப்­ப­டையில்  நச்சு போதைப்­பொருள் தொடர்­பாக உயர் நீதி மன்­றத்தில் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான புள்­ளி­வி­பர அறிக்­கை­யின்­படி, ஆண், பெண் வேறு­பா­டின்றி போதைப்­பொருள் கடத்­தலில்  சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 96, ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­னிக்கை 275, வேறு தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 3119 ஆகும்.

ஜனா­தி­ப­தியின் ஊட­கப்­பி­ரி­வினால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த கருத்­தின்­படி, போதையின் பிடி­யி­லி­ருந்து எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காப்­ப­தற்­காக போதைப்­பொருள் ஒழிப்பு மற்றும் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­ப­தியின் வழி­காட்­டலில் விரி­வான வேலைத்­திட்­டங்கள் பலவும் தற்­போது நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அதே­வேளை, அச்­செ­யற்­றிட்­டங்கள் ஜனா­தி­ப­தியால் தொடர்ச்­சி­யாக மீளாய்வு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்­த­லுக்கு சிறிதும் இட­ம­ளிக்­காது அதனை முற்­றாக ஒழிப்­ப­தற்குத் தேவை­யான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள ஜனா­தி­பதி  எதிர்­பார்ப்­ப­துடன், இதன்­போது சட்­டத்­தினை வினைத்­தி­ற­னா­கவும் கடு­மை­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரங்­களை சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் வழங்­கு­வ­தற்குத் தேவை­யான சட்ட வரைவும் தற்­போது ஜனா­தி­ப­தியின்  பணிப்­பு­ரைக்­க­மைய துரி­த­மாக இடம்­பெற்று வரு­கின்­றது.

2017 ஆம் ஆண்டில் போதை பழக்­கத்­திற்கு அடி­மை­யான 2706 நபர்களுக்கும் புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 1280 (47%)  பேர் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 295 (11%) பேர் சிறைச்சாலை திணைக்கள புனர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும்,  608 பேர் (23%) அரச சார்பற்ற அமைப் புக்களின் முன்னெ டுப்புக்கள் மூலமாகவும், 523 பேர் (19%) புனர்வாழ்வு  அலுவலகத்தின் கீழ் புனர்வாழ்வு அளிக்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தை (43%)  சேர்ந்தவர்களே புனர்வாழ்வு மையத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். 30 தொடக்கம் 54 வயதுக்குட்பட்டவர்களே அங்கு சிகிச்சை பெறுகின்றனர். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் வீதம் 15% ஆக அதிகரித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.