புத்தளம் குப்பை விவகாரம்: ஐ.நா. சுற்றாடல் அறிக்கையாளரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது

ஜெனிவாவில் முயீஸ் வஹாப்தீன் தெரிவிப்பு

0 607

புத்­த­ளத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ நிலை­யத்­தினால் அப்­ப­குதி மக்­க­ளுக்கு ஏற்­ப­ட­வுள்ள ஆபத்­துகள் தொடர்பில் தாம் ஐக்­கிய நாடுகள் சபையின் சுற்­றாடல் தொடர்­பான விசேட அறிக்­கை­யா­ள­ரிடம் முறைப்­பா­டு­களை கைய­ளித்­துள்­ள­தா­கவும் தொடர்ந்தும் இந்த விவ­காரம் தொடர்­பான தக­வல்­களை ஐ.நா.வுடன் பரி­மாறி வரு­வ­தா­கவும் இலங்கை சமூ­கத்­திற்­கான ஐரோப்­பிய நிலை­யத்தின் பொதுச் செய­லாளர் முயீஸ் வஹாப்தீன் தெரி­வித்தார்.

ஜெனீ­வாவில் தற்­போது நடை­பெற்­று­வரும்   மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்­கேற்­றுள்ள அவர், இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புத்­த­ளத்தில் தற்­போது குப்பை பிரச்­சினை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. புத்­த­ளத்தில் முஸ்லிம் மக்கள் மட்டும் வாழ­வில்லை. மாறாக தமிழ், சிங்­கள மக்­களும் வாழ்­கின்­றார்கள். இந்­நி­லையில் கொழும்பு குப்­பை­களை அங்கு கொண்­டு­சென்று கொட்­டு­வது அந்த மக்­களை ஒடுக்கும் செயற்­பா­டா­கவே தெரி­கின்­றது. அந்தப் பிர­தேச மக்கள் பாரி­ய­ளவில் இதனை எதிர்த்தும் அர­சாங்கம் இதனை வலுக்­கட்­டா­ய­மாக செய்­கின்­றது என்றால் அது பாரிய கேள்­விக்­கு­றி­யாக அமை­கின்­றது. இது தொடர்­பிலும் நாங்கள் செயற்­ப­ட­வி­ருக்­கின்றோம். ஐக்­கிய நாடுகள் சபையின் சுற்றாடல் சம்பந்தமான விசேட அறிக்கையாளரிடம் இது தொடர்பாக அறிக்கைகளையும் தகவல்களையும் பரிமாறிவருகின்றோம் என்றார்.
-Vidvielli

Leave A Reply

Your email address will not be published.