புல்மோட்டையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள்

தகவல் அறியும் சட்டம் மூலம் உறுதியானது

0 742

புல்­மோட்­டையில் தென்­ன­ம­ர­வா­டிக்கு அண்­மை­யா­க­வுள்ள பகு­தியில் இரண்டு புதிய சிங்­கள குடி­யேற்­றங்கள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றமை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் பெறப்­பட்ட தக­வ­லுக்கு அமை­வாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

‘PEARL action’ என்ற ஆய்வு நிறு­வனம் கடந்த வாரம் புல்­மோட்­டையை அண்­டிய பகு­தியில் நடை­பெற்­று­வரும் சிங்­க­ள­ம­ய­மாக்கல் சம்­பந்­த­மாக ஓர் ஆய்வு அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. இந்த அறிக்­கையில் வடக்கு கிழக்கின் எல்­லையில் தமிழ் கிரா­மங்­களை அப­க­ரித்து மேற்­கொள்­ளப்­பட்­டு­ வரும் திட்­ட­மிட்ட சிங்­கள ஆக்­கி­ர­மிப்பு தொடர்பில் பல தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன.

தென்­ன­ம­ர­வ­டி­யி­லி­ருந்து புல்­மோட்டை செல்லும் வீதியில் புல்­மோட்டை போக­க­வெவ (B60) வீதியில் உள்ள  குச்­ச­வெளி பிர­தேச செயலாளர் பிரிவில் வரும் இரண்டு கிரா­மங்­களை ஆக்­கி­ர­மித்து  பௌத்த பிக்­கு­களின் ஆத­ர­வு­டனும் சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பாது­காப்­பு­டனும் வீட­மைப்பு அதி­கா­ர­ச­பையால் வீடுகள்  அமைக்­கப்­பட்டு  குறித்த குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

திரு­கோ­ண­ம­லை மாவட்­டத்தின் குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் வரும் மாலனூர்(12ஆம் கட்டை)  மற்றும் ஏர­மடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிரா­மங்­களை ஆக்­கி­ர­மித்து வீதியின் ஓர­மாக பல சிங்­கள குடும்­பங்கள் காடு­களை வெட்டி தற்­கா­லிக  வீடு­களை அமைத்து குடி­யே­றி­யுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு வீட­மைப்பு அதி­கார சபையால் பிர­தேச செய­ல­கத்தின் எந்­த­வி­த­மான அனு­ம­தி­க­ளு­மின்றி வீட்டு திட்­டங்­க­ளுக்­கான நிதி வழங்­கப்­பட்டு வீடு­களை அமைக்கும் வேலைகள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது .

இந்த குடி­யேற்­றங்கள் தொடர்பில் குச்­ச­வெளி பிர­தேச செய­ல­கத்­துக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தக­வல்­களை பெறு­வ­தற்­காக விண்ணம் செய்­யப்­பட்­டுள்­ளது (கோரிக்கை  பதிவு இலக்கம் 069)  . அதா­வது குறித்த குடி­யேற்­றங்கள் பிர­தேச செய­ல­கத்தின் அனு­ம­தி­யுடன் இடம்­பெ­று­கின்­றதா எனவும் ,  இந்த குடி­யேற்­றங்­க­ளுக்­காக தற்­போது அமைக்­கப்­பட்­டு­வரும் வீடுகள் தொடர்பில் குச்­ச­வெளி பிர­தேச செய­ல­கத்தின் அனு­மதி  பெறப்­பட்­டதா? இந்த பிர­தேசம் குச்­ச­வெளி பிர­தேச செய­லக ஆடசி பகு­திக்குள்  வரு­கின்­றதா எனவும் கேள்­விகள் கேட்­கப்­பட்­டது.

இதற்கு குச்­ச­வெளி பிரதேச செய­ல­கத்தால்  பதில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதில் , குறித்த பிர­தே­சத்தில் குறித்த நபர்­களால் அத்­து­மீறல் மேற்­கொள்­ளப்­பட்டே குடி­யே­றினர் எனவும் , குச்­ச­வெளி பிர­தேச செயலாளர் பிரிவில் அத்­து­மீறி ஆட்சி செய்­ததன் கார­ண­மாக வெளி­யேற்றல் கட்­டளை  பிறப்­பிக்­கப்­பட்­ட­தா­கவும்  காணி பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் அனு­ம­திகள் எவை­யு­மின்றி வீட­மைப்பு அதி­கா­ர­ச­பையால் வீடுகள் அமைக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் குறித்த பிர­தேசம் குச்­ச­வெளி பிர­தேச செய­லக பிரி­வுக்குள் வரு­வ­தனால்   எமது பிர­தேச செய­லா­கத்­தா­லேயே  நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் தகவல் அறியும் உரி­மை­சட்டம்  மூலம் பெறப்­பட்ட தக­வ­லுக்கு அமை­வாக இங்கே அத்­து­மீறல் மேற்­கொள்­ளப்­பட்டு குடி­யேற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வது அப்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது . இந்த குடி­யேற்­றங்­களை அண்­மை­யாக 24 மணி­நே­ரமும் சிவில் பாது­காப்பு திணைக்­கள இரா­ணு­வத்­தினர் இருவர் பாது­காப்பு அரண் ஒன்றை அமைத்து பாது­காப்பு பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அத்­தோடு மாலனூர் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ள­பட்டு வரும் குடி­யேற்­றத்­துக்கு “சாந்­தி­புர” எனவும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு ஒவ்­வொரு குடி­யேற்­றத்­துக்கும் அண்மையாக பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரதேசத்துக்கு அண்மையாக 13 ஆம் கட்டை  பகுதியில் மடம்  ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்து இந்த குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும் பௌத்த சின்னங்களை  புல்மோட்டையை சுற்றியுள்ள 30 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவில்  அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.