நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலை: ஐந்து ஜனாஸாக்கள் நேற்று நல்லடக்கம்

0 657

நியூ­ஸி­லாந்து வர­லாற்றில் பொது­மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட மிக மோச­மான கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் உடல்கள் ஐந்து நாட்­களின் பின்னர் குடும்­பத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

திடீர் மரண விசா­ரணை அதி­காரி அலு­வ­ல­கத்­திலின் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்து ஜனா­ஸாக்கள் விடு­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறைந்­தது ஐந்து ஜனா­ஸாக்கள் நேற்று ஞாப­கார்த்த பூங்கா மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன.

கொல்­லப்­ப­டு­வ­தற்கு ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் நியூ­ஸி­லாந்­திற்கு வந்து சேர்ந்­தி­ருந்த 15 வயது சிரிய நாட்டு அக­தி­யான ஹம்ஸா முஸ்­தபா, அவ­ரது தந்தை 44 வய­தான காலித் ஆகி­யோரின் ஜனா­ஸாக்கள் கடந்த புதன்­கி­ழமை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட ஜனா­ஸாக்­களுள் உள்­ள­டங்­கு­கின்­றன.

மர­ண­ம­டைந்த ஹம்­ஸாவின் இளைய சகோ­த­ர­னான 13 வய­தான ஸெயிட்­டுக்கு துப்­பாக்கிச் சூட்டின் கார­ண­மாக காலில் காயம் ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரு­கின்றார். ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் சக்­கர நாற்­கா­லியில் அமர்ந்­த­வாறு கலந்­து­கொண்­டி­ருந்தார்.

36 வய­தான ஜுனைட் இஸ்­மாயில் மற்றும் 58 வய­தான அஷ்ரப் அலி ஆகி­யோரின் ஜனா­ஸாக்கள் புதன்­கி­ழமை பிற்­பகல் வேளையில் பிறி­தொரு நிகழ்வில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட ஐந்­தா­வது ஜனா­ஸாவின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட குழி­யினை மூடு­வ­தற்கு சவள் போன்ற உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்த வேண்டாம் எனக் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. மண்ணைக் குழி­யினுள் போடும் செயற்­பாட்டில் அனை­வரும் பங்­கேற்க வேண்டும் என்­ப­தற்­காக இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. அதற்­க­மை­வாக அனை­வரும் தமது கரங்­க­ளி­னா­லேயே மண்­ணைப்­போட்டு குழி­களை மூடினர்.

அந் நூர் மற்றும் லின்வூட் பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற வெள்­ளிக்­கி­ழமை தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் ஐந்து பேரின் பெயர்கள் பொலி­ஸாரால் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து நல்­ல­டக்கம் இடம்­பெற்­றது.

திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசின்டா ஆர்டேனினால் வருணிக்கப்பட்டுள்ள இப் படுகொலைச் சம்பவத்தில் மூன்று வயதான முகாட் இப்றாஹிம் என்ற சிறுவனும் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.