பாதாள உல­கக்­குழு, போதைக் கும்­ப­லுடன் தொடர்­பு­ப­டுத்தி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மீது அவ­தூறு பரப்­பிய நப­ரிடம் சி.சி.டீ. விசா­ரணை

0 665

பாதாள உல­கக்­கு­ழு­வினர் மற்றும் போதைக் கும்­ப­லுடன் தொடர்­பு­ப­டுத்தி கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னுக்கு எதி­ராக சமூக ஊட­கங்­களில் பொய் மற்றும் அவ­தூறு செய்­தி­களை பரப்பி வந்த நபர் ஒரு­வரை குற்றத் தடுப்பு பிரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளர்.

பேரு­வளை பகு­தியைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நப­ரி­டமே கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் இவ்­வாறு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.  அண்­மையில் துபாயில் கைது செய்­யப்­பட்ட மதூஷ் மற்றும் கஞ்­சி­பானை இம்ரான் என்­ப­வர்­க­ளோடு தொடர்புபடுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னுக்கு எதி­ராக சமூக ஊட­கங்­களில் திட்­ட­மிட்டு பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

“ட்ரூ முஸ்லிம்” என்ற  வட்ஸ்அப் குழு­மத்தை நடாத்தி வரும் பேரு­வ­ளையைச் சேர்ந்த அஸாப் அஹமட் என்ற நபரே இந்த பொய் மற்றும் அவ­தூறு பிர­சா­ரத்தை பரப்பி வந்­தி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

பாதாள உல­கத்­துடன் தன்னை தொடர்பு படுத்தி பரப்­பப்­பட்ட இந்த  அவ­தூறு பிர­சா­ரத்தின் மூல­மாக தன்னை ஏனைய குழுக்கள் இலக்கு வைப்­ப­தற்கு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தி கொடுத்­தி­ருப்­ப­தா­கவும்,  தனக்கு  மரண அச்­சு­றுத்தல் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு குறித்த  அர­சியல் சக்­திகள் திட்­ட­மிட்டே இந்த பிர­சா­ரத்தை பரப்பி வந்­த­தா­கவும் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரிவில் முறைப்­பா­டொன்றை அண்­மையில் பதிவு செய்­தி­ருந்தார்.

இதற்­க­மை­யவே குறிப்­பிட்ட நபர் குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தப்பட்­டுள்ளார். அத்­துடன், முதல்நாள் விசாரணையின் போது, கையடக்கத் தொலைபேசி உள்ளிட்டவற்றை சமர்பிக்காமையினால் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.