நியூஸிலாந்து நாட்டில் இரண்டு பள்ளிவாசல்களில் படுகொலை

உயிரிழப்புகள் 50 ஆக உயர்வு; மேலும் 50 பேர் காயம்; 12 பேரின் நிலை கவலைக்கிடம்

0 867

நியூ­ஸி­லாந்தின் கிறிஸ்ட்சர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கொடூ­ர­மான துப்­பாக்­கிச்­சூட்டில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 50 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் மேலும் 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் 34 பேருக்கு வைத்­தி­ய­சா­லையில் சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் 12 பேரின் நிலை  தொடர்ந்தும் கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கவும் நியூ­ஸி­லாந்து ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

காய­ம­டைந்­த­வர்­களுள் சிறுமி ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர் அரு­கி­லுள்ள சிறுவர் நல வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிசார் தெரி­விக்­கின்­றனர்.

உயி­ரி­ழந்­தோரின் ஜனா­ஸாக்கள் நேற்று மாலை வரை கிறிஸ்ட்சர்ச் வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஜனா­ஸாக்கள் அடை­யாளம் காணப்­பட்டு சட்ட ரீதி­யான ஏற்­பா­டுகள் நிறைவு பெற்ற பின்னர் நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என கிறிஸ்ட்சர்ச் பள்­ளி­வாசல் நிர்­வாகம் அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை இத்­துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய தீவி­ர­வாதி அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 28 வய­தான  பிரென்டன் ஹரிசன் டரன்ட் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். குறித்த நபர் தற்­போது கைது செய்­யப்­பட்டு படு­கொலை குற்­றச்­சாட்டின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

துப்­பாக்கிச் சூடு நடத்­திய தீவி­ர­வாதி, பேஸ்புக், இன்ஸ்ட்­ரா­கி­ராமில் நேரலை(லைவ்) செய்து கொண்டே துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, அந்த வீடியோ நீக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த துப்­பாக்கிச் சூடு தொடர்­பாக இது­வரை 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இதில் ஒருவர் மாத்­தி­ரமே இச் சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அந் நூர் பள்­ளி­வாசல் மற்றும் லின்­வுடந் பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முஸ்­லிம்கள் ஜும்ஆ தொழு­கைக்­காக தயார் நிலையில் இருந்­தனர். அப்­போது அங்கு வந்த குறித்த தீவி­ர­வாதி துப்­பாக்­கியால் கண்­மூ­டித்­த­ன­மாக சுட்­டதில் ஏரா­ள­மானோர் இரத்த வெள்­ளத்தில் உயி­ரி­ழந்­தனர், பலர் காய­ம­டைந்­தனர்.

மிகவும் அமை­தி­யான நியூ­ஸி­லாந்து நாட்டில் ஒரே நேரத்தில்  இரு பள்­ளி­வா­சல்­க­ளிலும்  துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டதால்,அந்­நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்­தனர். இதை­ய­டுத்து, கிறிஸ்ட்சர்ச் நகர் முழு­வதும்  பதற்­ற­மா­ன­தாக அறி­விக்­கப்­பட்டு அலு­வ­ல­கங்கள், வர்த்­தக நிறு­வ­னங்­களை மூட பொலிஸார் உத்­த­ர­விட்­டனர். குழந்­தைகள், மாண­வர்­களை பள்ளி, கல்­லூ­ரியில் இருந்து வீடு திரும்ப வேண்டாம் எனக் கேட்­டுக்­கொண்­டனர்.

இதை­ய­டுத்து, பொலிஸார் குவிக்­கப்­பட்டு, பள்­ளி­வா­சலில் நுழைந்து துப்­பாக்கிச் சூடு நடத்­திய தீவி­ர­வா­தியை துரத்திச் சென்று கைது செய்­தனர்.

இச் சம்­பவம் குறித்து  கிறிஸ்ட் சர்ச் பொலிஸ் ஆணை­யாளர் மைக் புஷ் கூறி­ய­தா­வது:

” கிறிஸ்ட்சர்ச் பள்­ளி­களில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்டில் 3 ஆண்கள், ஒரு பெண் உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­டனர். வேறு யாரும் ஈடு­பட்டு இருக்­கி­றார்­களா எனத் தெரி­ய­வில்லை. தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்­களில் ஒருவர் அவுஸ்­தி­ரே­லிய நாட்டைச் சேர்ந்­தவர் என்­பது தெரிந்­தது.

இந்த தாக்­கு­த­லுக்குப் பின் மிகப்­பெ­ரிய அளவில் மற்­றொரு தாக்­குதல் நடத்த வாக­னங்­களில் வெடி­பொ­ருட்­க­ளையும் அவர்கள் நிரப்பி வைத்­தி­ருந்­தனர்.

துப்­பாக்கிச் சூடு நடாத்தும் வீடி­யோக்­களை கண்­டு­பி­டித்து நீக்­கி­யுள்ளோம். வேறு யாரேனும் அந்த வீடியோ பகிர்ந்­துள்­ளார்­களா எனவும் விசா­ரணை நடத்தி வரு­கிறோம். அந்த வீடியோ உண்­மையில் மனதை உறை­ய­வைக்கும் வித­மாக இருந்­தது. அதை மக்கள் யாரேனும் பார்த்­து­வி­டக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக இருக்­கிறோம்.

துப்­பாக்கி ஏந்­திய ஒருவர் பள்­ளிக்குள் நுழைந்­தது முதல் துப்­பாக்கி சூடு நடத்­து­வதும், தப்பி ஓடு­ப­வர்கள் மீது சுட்டு வீழ்த்­து­வ­து­மாக அந்த வீடி­யோவில் காட்­சிகள் இடம் பெற்­றுள்­ளன. இந்த தாக்­கு­த­லுக்­கான காரணம் இன்னும் தெரி­ய­வில்லை ஆனால், இன­வெறி கார­ண­மாக நடந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கிறோம் என அவர் தெரி­வித்தார்.

இதற்­கி­டையே நியூ­சி­லாந்து பிர­தமர் ஜெசிந்தா அட்ரென் சனிக்­கி­ழமை உரை­யாற்­று­கையில், ” கிறிஸ்ட்­சர்ச்சில் இரு பள்­ளி­களில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது. லிண்­வுன்ட பள்­ளியில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்டில் 10 பேரும், ஹக்லே பார்க் மசூ­தியில் 39 பேரும் கொல்­லப்­பட்­டனர். 20 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர். இதை தீவி­ர­வாத தாக்­குதல் என்­றுதான் அழைக்க வேண்டும். நீண்­ட­காலம் திட்­ட­மி­டப்­பட்டு இந்த தாக்­கு­தலை நடத்தி இருக்க வேண்டும். இது தொடர்­பாக ஒரு பெண் உள்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதில் ஒருவர் அவுஸ்­தி­ரே­லிய நாட்டைச் சேர்­தவர் ” எனத் தெரி­வித்தார்.

வல­து­சாரி தீவி­ர­வாதி

அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் ஸ்காட் மாரிஸன் கூறு­கையில், ” நியூ­ஸி­லாந்து துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு நாங்கள் மிகுந்த வேதனை தெரி­விக்­கிறோம். இதில் ஈடு­பட்ட அவுஸ்­தி­ரே­லிய நாட்டைச் சேர்ந்­தவர் ஒரு வல­து­சாரி தீவி­ர­வாதி. இந்த தாக்­கு­த­லுக்கும், அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்­கி­றதா என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் ” எனத் தெரி­வித்தார்.

மின்­னஞ்­சலில் அறி­வித்த தீவி­ர­வாதி

இந்­நி­லையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கிரைஸ்ட்சர்ச் நக­ரத்தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த நியூ­சி­லாந்து பிர­தமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “கிரைஸ்ட்­சர்ச்சின் இரு­வேறு பள்­ளி­வா­சல்­களில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர், அந்த தாக்­கு­தலை தொடுப்­ப­தற்கு சுமார் ஒன்­பது நிமி­டங்கள் முன்­ன­தாக அது­கு­றித்த அறிக்கை ஒன்றை, எனக்கு உட்­பட 30 பேருக்கு மின்­னஞ்சல் செய்தார்” என்று கூறினார்.

இருப்­பினும், அந்த மின்­னஞ்­சலில், தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வ­தற்­காக குறிப்­பிட்ட கார­ணமோ அல்­லது தாக்­குதல் நடக்­க­வுள்ள இடம் பற்­றிய தக­வலோ குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்றும், அந்த மின்­னஞ்சல் தனக்கு கிடைக்­கப்­பெற்ற இரண்டே நிமி­டங்­களில் அது­கு­றித்து பாது­காப்பு படை­யி­ன­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் மேலும் கூறி­யுள்ளார்.

“இதை ஒரு தீவி­ர­வாதத் தாக்­குதல் என்­றுதான் கூற முடியும். நீங்கள் அனை­வரும் அந்த தாக்­குதல் காணொ­லியை பார்த்­தி­ருப்­பீர்கள் என நம்­பு­கிறேன். தீவி­ர­வாத எண்ணம் கொண்­ட­வர்­க­ளுக்கு நியூ­சி­லாந்­திலும் இந்த உல­கத்­திலும் இட­மில்லை,” என நியூ­சி­லாந்து பிர­தமர் கூறினார்.

நியூ­ஸி­லாந்து மீதான எங்கள் நம்­பிக்­கையை அசைக்க முடி­யாது: இமாம்

தொழு­கையில் ஈடு­பட்ட ஏரா­ள­மான முஸ்­லிம்­களை கொல்­வ­தன்­மூலம் நாட்டின் மீதான எங்கள் நேசத்தை சிதைத்­து­வி­டவோ நம்­பிக்­கையை அசைத்­து­வி­டவோ முடி­யாது என படு­கொலை சம்­பவம் நடந்த பள்­ளி­வாசல் இமாம் தெரி­வித்­துள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து படு­கொலை நடை­பெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரின் லின்வுட் மசூ­தியைச் சேர்ந்த இமாம் இப்­ராஹிம் அப்துல் ஹலீம் தெரி­வித்­த­தா­வது:

இப்­போதும் நாங்கள் இந்த நாட்டை நேசிக்­கிறோம். எங்கள் நம்­பிக்­கையை அசைக்க முடி­யாது. பள்­ளியில் துப்­பாக்கிச் சூடு நடந்­த­போது வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தோம். அமை­தி­யான தொழு­கைக்கு மாறாக திடீ­ரென அலறல் சத்தம் கேட்­டது.  ரத்­தக்­க­ள­றியில் சிலர் இறந்­தனர். அப்­போது எல்­லோரும் தரையில் படுத்­து­விட்­டனர். சில பெண்கள் அழத் தொடங்­கினர். சிலர் உட­ன­டி­யாக இறந்­து­விட்­டனர். எங்கள் குழந்­தைகள் இங்­குதான் வாழ்­கின்­றனர். நாங்கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கிறோம்’ என்­றுதான் தெற்கு பசிபிக் நாடான நியூ­ஸி­லாந்தில் முஸ்­லிம்கள் நினைக்­கின்­றனர்.

பெரும்­பா­லான நியூ­ஸி­லாந்து மக்கள் எங்­க­ளுக்கு அனைத்து வித­மான ஆத­ர­வையும் தர ஆர்­வ­மாக உள்­ளனர். முஸ்லிம் அல்­லாத அந்­நி­யர்கள் பலரும் எங்­களைச் சந்­தித்து கட்­டி­ய­ணைத்து ஆறுதல் அளித்து வரு­கின்­றனர். இது மிகவும் முக்­கி­ய­மா­னது. இது எங்­க­ளுக்கு பலத்தைத் தரும்.

தொழு­கையில் ஈடு­பட்ட ஏரா­ள­மான முஸ்­லிம்­களைக் கொல்­வதன் மூலம் நியூ­ஸி­லாந்து நாட்டின் மீதான எங்கள் நேசத்தைச் சிதைத்­து­வி­டவோ சக மக்­க­ளோடு நாங்கள் கொண்­டி­ருக்கும் நம்­பிக்­கையை அசைத்து விடவோ முடி­யாது என  இமாம் இப்­ராஹிம் அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

தீவி­ர­வா­தியை தடுத்த நபர்

பள்­ளி­வா­சல்கள் மீது கொடூ­ர­மாகத் துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய நபரை ஒருவர் இறுக்­க­மாகப் பிடிக்­கா­தி­ருந்தால் பலி எண்­ணிக்கை இன்னும் படு­மோ­ச­மாக இருந்­தி­ருக்கும் என்று நேரில் பார்த்த ஒருவர் இந்­தியத் தனியார் தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­ய­ளித்தார்.

இந்­நி­லையில் நேரில் பார்த்த நபர் கூறும்­போது, “நாங்கள் சிறிய பள்­ளியில் இருந்தோம். 100  சது­ர­மீட்­டர்­கள்தான் இருக்கும். அப்­போது துப்­பாக்கி ஏந்­திய மர்­ம­நபர் பள்­ளிக்குள் வந்து சுடு­கிறார் என்றால் நம்மால் எதுவும் செய்ய முடி­யாது, உயி­ரைக்­காப்­பாற்றிக் கொள்­ளத்தான் தோன்றும் இது மனித இயல்பு.  ஆனால் நானும் என் நண்­பனும் நேரில் பார்த்த காட்சி எங்­களை பிர­மிக்க வைத்­தது. ஒரு நபர் தைரி­ய­மாக துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­வனை பின்­பு­ற­மி­ருந்து இறுக்கப் பிடித்தார், அவனால் ஒன்றும்  செய்ய முடி­ய­வில்லை, துப்­பாக்­கியை கீழே போடும்­வரை அவர் பிடி தள­ர­வில்லை.

அவர் பிடித்­த­தை­ய­டுத்து துப்­பாக்கி கீழே விழுந்­ததால் தாக்­குதல் நடத்­திய தீவி­ர­வாதி கதவை நோக்கி ஓடு­வதைத் தவிர வேறு வழி­யில்­லாமல் போய் விட்­டது, இது மட்டும் நடக்­க­வில்­லை­யெனில் இன்னும் பலர் கொல்­லப்­பட்­டி­ருப்­பார்கள். நானும் இப்­போது உங்கள் முன்னால் நின்று கொண்­டி­ருக்க மாட்டேன். அந்த மனி­த­னுக்கு நன்­றிகள் பல. அவர் யார் என்று நிச்­சயம் கண்­டு­பி­டிப்போம்.

நான் யாருக்­கா­கவும் பேச­வில்லை. கடந்த 10 ஆண்­டு­க­ளாக இந்த அழ­கான நாட்டில் வசித்து வரு­கிறேன். இங்கு நமக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தல்­களும் இல்லை, இல்­ல­வே­யில்லை. ஆகவே ஒரு சம்­ப­வத்தை வைத்து இந்த நாட்டைப் பற்றி நான் கருத்து கூறுதல் கூடாது.

நான் நியூ­ஸி­லாந்தை நேசிக்­கிறேன், இங்கு வாழும் மக்­களை நேசிக்­கிறேன்.  நியூ­ஸி­லாந்து மக்­க­ளி­ட­மி­ருந்­துதான் எனக்கு இந்தச் சம்­ப­வத்­துக்குப் பிறகு நலம் விசா­ரித்து அதிக அழைப்­புகள் வந்­தன” என்­கிறார் பைசல் சையத் என்­கிற இந்த நபர்.

பல நாடு­களைச் சேர்ந்தோர் உயி­ரி­ழப்பு

இந்த தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்கு குடி­யே­றி­ய­வர்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இது­வரை உயி­ரி­ழந்­த­வர்­களில் முத­லா­வ­தாக அடை­யாளம் காணப்­பட்­டவர் 1980களில் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்கு குடி­யே­றிய 71 வய­தான தாவூத் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

ஏனை­ய­வர்கள் பலஸ்தீன், ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா,எகிப்து, ஜோர்தான், சவூதி அரே­பியா ஆகிய நாடு­களைச் சேர்ந்தோர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். மேலும் சில­ரது ஜனா­ஸாக்கள் அடை­யாளம் காணப்­பட வேண்­டி­யுள்­ளன.

உயிர் தப்­பிய பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி

கிரைஸ்ட்­சர்ச்சின் ஹாகிலே பூங்­கா­வுக்கு அரு­கி­லுள்ள மற்­றொரு பள்­ளியில் நிகழ்த்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டி­லி­ருந்து, நியூ­சி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி­யினர் பத்­தி­ர­மாக வெளி­யே­றினர்.

“நாங்கள் அனை­வரும் துப்­பாக்­கி­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றப்­பட்­டு­விட்டோம். இந்த பய­மு­றுத்தும் அனு­ப­வத்­தி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்கு எங்­க­ளுக்­காக பிரார்த்­தனை செய்­யுங்கள்” என்று பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்­டரில் பதி­விட்­டி­ருந்தார்.

இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து பங்­க­ளாதேஷ் அணி பங்­கேற்­க­வி­ருந்த கிரிக்கெட் போட்­டி­களும் இரத்துச் செய்­யப்­பட்­டன.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பூட்டு

தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற கிறிஸ்ட்சர்ச் டீன்ஸ் வீதி, மஸ்­ஜிதுந் நூர் மற்றும் கிறிஸ்ட்சர்ச் லின்வூட் பள்ளிவாசல் ஆகியன பூட்டப்பட்டுள்ளதுடன் இப் பள்ளிகளில் மக்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நியூஸிலாந்து முழுவதிலுமுள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அனுதாபம்

இத் தாக்குதலினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள நியூஸிலாந்து மக்கள் பள்ளிவாசல்களின் முன்னால் ஒன்றுதிரண்டு தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கு வெளியே மலர்ச் செண்டுகளை அடுக்கியும் அதில் முஸ்லிம்கள் மீதான தமது அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களை எழுதியும் தமது அனுதாபத்தை வெளியிட்டு வருகின்றனர்.

மேற்கு நாடுகளிலும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு

இத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜும்ஆவின் போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் விடிவெள்ளியில் எதிர்பாருங்கள்)
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.