சிலாவத்துறை மக்களுக்கு மன்னார் பிரதேச சபை ஆதரவு

0 690

முசலி பிர­தேச சபைக்­குட்­பட்ட சிலா­வத்­து­றையில் கடற்­ப­டை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள  காணியை விடு­வித்து மக்­களின் பாவ­னைக்கு கைய­ளிக்­கு­மாறு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக மன்னார் பிர­தேச சபையில் நேற்று தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

குறித்த போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என சபையின் தவி­சாளர் முஜாஹிர்  முன்­வைத்த யோச­னைக்கு  21 சபை உறுப்­பி­னர்­களும் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கி­ய­துடன் இத் தீர்­மா­னத்தை உரிய அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு சமர்ப்­பிப்­பது எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இன மத பேதங்­க­ளுக்கு அப்பால் 21 நாட்­க­ளாக முசலி பிர­தே­சத்தில் இந்த போராட்டம் நடை­பெற்று வரு­கின்­றது.

இந்த முசலி பிர­தே­சத்தில் 32 கிரா­மங்­க­ளுக்கும் தலை­ந­க­ராக சிலா­வத்­துறை நகர் காணப்­ப­டு­கி­றது. இந்த நகரில் அமைந்­துள்ள கடற்­படை முகாம் அகற்­றப்­ப­ட­வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் முக­மாக இந்த போராட்டம் நடை­பெற்று வரு­கின்­றது. இந்த போராட்­டத்தை முன்­னெ­டுக்கும் மக்­க­ளுக்கு எமது பிர­தேச மக்கள் சார்­பாக மன்னார் பிரதேச சபை முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.