2018 இல் அதிகூடிய சிறுவர்கள் சிரியாவிலேயே உயிரிழந்துள்ளனர்

யுனிசெப் தெரிவிப்பு

0 627

சிரி­யாவின் உள்­நாட்டு யுத்தம் தொடங்கி ஒன்­பது ஆண்டு நிறை­வ­டைந்­துள்ள நிலையில் 2018 இல் அதி கூடிய சிறு­வர்கள் சிரி­யா­வி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளனர் என யுனிசெப் அமைப்பு கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது.

எட்டு ஆண்­டு­களை விடவும் கடந்த ஆண்­டி­லேயே சிறு­வர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஆபத்­துக்­களை எதிர்­நோக்­கி­ய­தாக யுனிசெப் அமைப்பின் பெண் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஹென்­ரி­யென்டா போ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் மாத்­திரம் மோதல்­களின் போது 1,106 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை யுத்தம் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து ஒரு ஆண்டில் ஏற்­பட்ட அதி­கூ­டிய உயி­ரி­ழப்­பாகும். இந்த எண்­ணிக்கை வெறு­மனே ஐக்­கிய நாடுகள் சபை­யினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட எண்­ணிக்­கை­யாகும், ஆனால் உண்­மை­யான உயி­ரி­ழப்­புக்கள் இதை­விட அதி­க­மாக இருப்­ப­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கல்வி மற்றும் சுகா­தார நிறு­வ­னங்கள் மீது 2018 ஆம் ஆண்டு 262 தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது அதி கூடிய எண்­ணிக்கை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த சில வாரங்­களில் மாத்­திரம் வட­மேற்கு சிரி­யா­வி­லுள்ள இட்­லிப்பில் இடம்­பெற்­று­வரும் தீவிர வன்­மு­றைகள் கார­ண­மாக 59 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அவர் கவலை தெரி­வித்­துள்ளார்.

சூனியப் பிர­தே­சங்­களில் வாழும் சிறு­வர்­களும் குடும்­பங்­களும் நிர்க்­கதி நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். ஜோர்­தா­னிய எல்­லைக்­க­ரு­கி­லுள்ள ருக்­பானில் வாழும் குடும்­பங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட உணவு, தண்ணீர், உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி நிலை காரணமாக மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.