நீதிமன்ற சுயாதீனம் கேள்விக்குறிதான்

கடற்படை தளபதியின் வழக்குகளில் இது உறுதியாகின்றது என்கிறார் சுமந்திரன் எம்.பி.

0 785

இலங்­கையின் நீதி­மன்ற சுயா­தீனம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது என்­பது  கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவின் வழக்­கு­களில் உறு­தி­யா­கின்­றது. 11 மாணவர்கள் கொலைக் குற்­ற­சாட்டில் அவரை காப்­பாற்ற சட்­டத்­து­றையே செயற்­ப­டு­கின்­றது. சாதா­ரண இளை­ஞர்­களின் கொலை­க­ளுக்கே இந்த நிலைமை என்றால் விடு­த­லைப்­பு­லிகள் மீதான குற்­றங்­க­ளுக்கு என்­ன­வா­கு­மென சபையில் கேள்வி எழுப்­பிய   தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ.சுமந்­திரன்,  கடற்­படை தள­பதி விவ­கா­ரத்தை உதா­ர­ண­மாக கொண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை சர்­வ­தேச விசா­ரணை தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இந்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்தில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அலு­வ­ல­கங்கள் மீதான நிதி ஒதுக்­கீடு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

உயர் நீதி­மன்ற செல­வி­னத்தை பொறுத்­த­வ­ரையில் கடந்த மாதம் ஒரு விவா­தத்தில் ஈடு­பட்­ட­போது  இரண்டு தரப்பில் இருந்தும் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் உயர்­நீ­தி­மன்றம்  சுயா­தீ­ன­மா­னது என கூறி­னார்கள். ஆகவே சர்­வ­தேச  நீதி­ப­திகள் தேவை­யில்­லை­யெ­னவும்  எமது நீதி­ப­திகள்  சுயா­தீ­ன­மா­ன­வர்கள்  அவர்கள் மூல­மாக விசா­ர­ணை­களை கையாள முடியும் என கூறி­னார்கள். எனினும் சில விட­யங்­களில் குறிப்­பாக அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்­களில் நம்­பிக்கை இருக்­கலாம். ஆனால் இலங்­கையைப்  பொறுத்­த­வ­ரையில் நீதித்­து­றையின் செயற்­பா­டு­களில்  உள்­நாட்டு நீதித்­துறை சுயா­தீ­ன­மா­னது அல்ல என்­பதை நான் அப்­போதும் கூறினேன். இது நிரூ­பிக்­கப்­பட்­டு­முள்­ளது. இதற்கு நல்­ல­தொரு உதா­ரணம் உள்­ளது.

குற்­ற­வா­ளிகள் தம்மை கைது செய்­வதை தடுக்க நீதி­மன்றம் நாடி பிணை கேட்­கின்ற வேடிக்­கை­யான நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. கடற்­படை தள­பதி கரன்­னா­கொட அவரை கைது செய்­வதை தடுப்­ப­தற்­கான  மேன்­மு­றை­யீடு ஒன்­றினை செய்­துள்ளார். தான் கைது செய்­யப்­ப­டு­வதை தடுக்க முயற்­சித்தும்  வரு­கின்றார். ஆனால் 11 இளை­ஞர்கள்  கொலை­யுடன் முக்­கிய சந்­தேக நப­ராக இவர் உள்ளார். இந்த இளை­ஞர்கள் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பில் உள்­ள­னரா இல்­லையா என்­பது பற்றி  நாம்  பேச­வில்லை. கொல்­லப்­பட்ட 11 பேரும்  விடு­த­லைப்­பு­லி­களும் அல்லர். இவர்­களை கடத்தி  பணம் பறிக்கும் முயற்சி இடம்­பெற்­றுள்­ளது. இது கடற்­படை தள­ப­திக்கும்  தெரிந்­துள்­ளது, முதலாம் முறைப்­பாட்­டையும்  அவரே செய்­துள்ளார். அவர் ஒரு தள­பதி என்ற கார­ணத்­தினால் இதனைக் கைவிட முடி­யுமா? ஆயுதப் படையின்  தலை­வ­ராக இருந்தால் அவ­ருக்கு கைதில் இருந்து பாது­காப்பு வழங்க முடி­யுமா? திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்கு அருகில் இந்த இளை­ஞர்கள்  கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தமிழ் இளை­ஞர்கள்.

மேலும் கரன்­ன­கொ­டவின் சட்­டத்­த­ர­ணியே இது யுத்த காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் என்­பதை வெளிப்­ப­டை­யாக கூறு­கின்றார். யுத்த காலம் என்­றதால் எந்த கொலையும் செய்­தி­ருக்க முடியும் எனக் கூறு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. கொல்­லப்­பட்­ட­வர்கள்  யாரா­கவும் இருக்­கலாம். ஆனால் இந்த கொலைகள் நியா­ய­மா­னது அல்ல. குறித்த இளை­ஞர்­களின் பெற்றோர் அவர்­களை தேடி வரு­கின்­றனர். ஆகவே இதில் நீதி­மன்றம்  உள்­ளிட்ட ஆணைக்­கு­ழுக்கள் பக்­கச்­சார்­பாக  நடந்­துள்­ளன. இதனை நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இது எதனை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்றால் நீதித்­துறை,சட்­டத்­துறை என்­பன பக்­கச்­சார்­பாக செயற்­பட்டு வரு­கின்­றன என்­ப­தையே. புலி­க­ளுடன் தொடர்­பு­ப­டாத தமிழ் இளை­ஞர்­க­ளுக்கே  இந்த நிலைமை என்றால் புலி­க­ளுக்கு என்ன நிலைமை என்­பதை சிந்­தித்­துப்­பா­ருங்கள்.

ஆகவே பொறுப்­புக்­கூறல்  விட­யத்தில் சர்­வ­தேச தலை­யீடு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே இடம்பெற முடியும். அதேபோல் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும். கரன்னாகொட விடயத்தில் நீதிச்சேவை சுயாதீனம் இல்லை என்பது  நல்லதொரு உதாரணம் . ஆகவே கடற்படை தளபதி விவகாரத்தை உதாரணமாக கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும். முழு உலகமும் இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.