எத்தியோப்பிய விமான விபத்தில் ஐ.நா. பணியாளர்கள் 20 பேர் பலி

0 601

எத்­தி­யோப்­பி­யாவின் அடிஸ் அபா­பா­வி­லி­ருந்து புறப்­பட்டு சிறிது நேரத்தில் விபத்­துக்­குள்­ளான எத்­தி­யோப்­பிய விமான சேவைக்கு சொந்­மான விமா­னத்தில் பய­ணித்த 21  ஐக்­கிய நாடுகள் சபை பணி­யா­ளர்­களும் பலி­யா­ன­தாக சபையின் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்ரெஸ் தெரி­வித்தார்.

உலக அனர்த்தம் எமது வீட்­டி­னையும் பாதித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையும் இந்தத் துக்­கத்­தினை பகிர்ந்து கொள்­வதில் ஒன்­றி­ணை­கின்­றது என நியூ­யோர்க்­கி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்தில் வைத்துத் தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை எத்­தி­யோப்­பிய தலை­ந­க­ரி­லி­ருந்து புறப்­பட்ட ET – 302 ரக விமானம் சிறிது நேரத்தில் விபத்­துக்­குள்­ளா­னதை அடுத்து அதில் பய­ணித்த 157 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

உயி­ரி­ழந்த எமது நண்­பர்கள் ஆண்­களும் பெண்­க­ளு­மாக உலகின் பல பாகங்­க­ளையும் சேர்ந்த பரந்­து­பட்ட நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்கள் என குட்ரெஸ் தெரி­வித்தார். அவர்கள் அனை­வ­ருக்கும் இருந்த ஒரே­யொரு பொது­வான நோக்கம் உலக மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வதும், எம்­ம­னை­வ­ருக்கும் சிறந்த இடத்தை உரு­வாக்­கு­வ­து­மாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

விமான விபத்­தினைத் தொடர்ந்து எத்­தி­யோப்­பிய விமான சேவை போயிங் 737 – 8 மெக்ஸ் விமானத் தொகு­தி­களை மறு அறி­வித்தல் வரை சேவையில் ஈடு­ப­டுத்­து­வதை இடை­நி­றுத்­தி­யுள்­ளது.

விபத்­திற்­கான காரணம் எது­வென அறி­யக்­கி­டைக்­காத போதிலும், மேல­திகப் பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக குறித்த தொகுதி விமா­னங்­களை சேவையில் ஈடு­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்கு நாம் தீர்­மா­னித்­துள்ளோம் என எத்­தி­யோப்­பிய விமான சேவை அறி­வித்­துள்­ளது.

இவ் விமானம் கடந்த நவம்பர் மாதம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. விபத்து ஏற்படுவதற்கு முன்னதான அவ்விமானத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் எவையும் காணப்படவில்லை எனவும் பிரதம நிறைவேற்றதிகாரி டிவெல்டே கெப்ரிமேரியம் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.