இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை ஒப்படைக்குமாறு கோரிக்கை

காணி உரிமையாளர்கள் நேரில் சென்றும் பார்வையிட்டனர்

0 592

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்து கடந்த ஜன­வரி மாதம் விடு­விக்­கப்­பட்ட தமது காணி­களை பார்­வை­யி­டு­வ­தற்­காக அட்­டா­ளைச்­சேனை அஷ்ரஃப் நகர் பிர­தேச மக்கள் நேற்று முன்­தினம் மாலை சென்­றி­ருந்­தனர்.

இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்த பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ர­விற்­க­மை­வாக வட-­கி­ழக்கு மாகா­ணங்­களில் உள்ள பெருந் தொகை­யான காணிகள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­க­மை­வாக, அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லகப் பிரிவின் கீழுள்ள அஷ்ரஃப் நகர்ப் பகு­தியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்த 39 ஏக்கர் காணிகள் கடந்த ஜன­வரி மாதம் 18 ஆம் திகதி இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லா­விடம் அக்­கா­ணி­க­ளுக்­கான ஆவ­ணங்கள் இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­களால் கைய­ளிக்­கப்­பட்­டன.

அம்­பாறை மாவட்ட செய­லாளர் டி.எம்.எல்.பண்­டா­ர­நா­யக்க தலை­மையில் மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற குறித்த நிகழ்­விற்குப் பின்னர், இக்­காணி விடு­விப்பு சம்­பந்­த­மாக எவ்­வித தக­வல்­களும் தமக்கு அறி­விக்­கப்­ப­டாமல் உள்­ள­தா­கவும், ஏனைய பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் காணி­க­ளுக்குள் உரி­மை­யா­ளர்கள் சென்றுவர அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்கும் இப்­ப­குதி மக்கள் ஏனைய பிர­தேச மக்கள் போல் தமக்கும் சட்ட ரீதி­யான நடை­மு­றை­யினை பின்­பற்ற அனு­ம­திக்க வேண்­டு­மென குறிப்­பி­டு­கின்­றனர்.

அஷ்ரஃப் நகர்ப் பிர­தே­சத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி மக்கள் பாது­காப்­பினை மையப்­ப­டுத்தி இப்­ப­கு­தியில் இரா­ணுவ முகாம் ஒன்று அமைக்­கப்­பட்­டது. சுமார் 59 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இரா­ணுவ முகாம் அமையப் பெற்­ற­தா­கவும், அந்­நி­லப்­ப­ரப்பில் 39 ஏக்கர் காணி­யினை அண்­மையில் இரா­ணு­வத்­தினர் விடு­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்கும் இப்­ப­குதி மக்கள், குறித்த சுமார் 20 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தொடர்ந்தும் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

அஷ்ரஃப் நகர் பிர­தேச மக்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 150 ஏக்கர் காணி இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழும், வன இலாகா உள்­ளிட்ட அரச துறையின் கட்­டுப்­பாட்­டிலும் இருப்­ப­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சொந்த நிலங்களை இழந்து உறவினர்களின் இல்லங்களில் வசித்து வரும் தமக்கு விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.