நைஜீரியாவில் 50 போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்

இராணுவம் அறிவிப்பு

0 593

நைகர் மற்றும் நைகர் குடி­ய­ர­சுக்­கி­டையே காணப்­படும் இரா­ணு­வத்­தளம் மீது போகோ ஹராம் மேற்­கொண்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை முறி­ய­டித்த மேற்கு ஆபி­ரிக்க பிராந்­தியப் படை­யினர் தம்­மோடு இடம்­பெற்ற இரு நேரடி மோதல்­களில் 50 இற்கும் குறை­யாத போகோ ஹராம் கிளர்ச்­சிக்­கா­ரர்கள் கடந்த சனிக்­கி­ழமை கொல்­லப்­பட்­ட­தாகத் தெரி­வித்­தனர்.

நைகர் குடி­ய­ரசின் பிபா­வி­லி­ருந்து 30 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள பகு­தி­யி­லுள்ள குயெஸ்­கெ­ரோஉ பகு­தியில் அமைந்­துள்ள படை­யினர் நிலை­கொண்­டுள்ள பகு­தியில் அவர்கள் மேற்­கொண்ட தாக்­கு­தலின் போது 27 கிளர்ச்­சிக்­கா­ரர்கள் கொல்­லப்­பட்­ட­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்ட பிராந்­திய இரா­ணு­வத்தின் பேச்­சாளர் டிமோதி அன்­டிக்ஹா தெரி­வித்தார்.

இரா­ணு­வத்­தினர் கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு துப்­பாக்கி ட்ரக் வண்­டி­களை தாக்­கி­ய­ழித்­த­தா­கவும், உப­க­ர­ணங்கள் பலவும், ஆயு­தங்கள், வெடிபொருட்கள் என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அவர் அந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

இது தவிர 20 ரைபிள்கள், மூன்று இயந்­திரத் துப்­பாக்­கிகள் மற்றும் ஏழு துப்­பாக்கி ட்ரக் வண்­டிகள் உள்­ளிட்ட பெருந்­தொகை ஆயு­தங்கள் தாக்­கி­ய­ழிக்­கப்­பட்ட போது அல்­லது கைப்­பற்­றப்­பட்­ட­போது வட­கி­ழக்கு போனோ மாநி­லத்தின் மல்லம் படோரி பிரதேசத்தில் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது மேலும் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் அன்டிக்ஹா தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.