மலே­சி­யாவில் இஸ்­லாத்தை தவ­றாக சித்­தி­ரித்த நப­ருக்கு பிணை மறுப்பு

0 678

சமூக வலைத் தளத்தில் இஸ்­லாத்­தையும் இறைத் தூதர் முகம்­மது நபி­யையும் கொச்­சைப்­ப­டுத்­திய மலே­சிய நபர் ஒரு­வ­ருக்கு ஏழு மாத­கால சிறைத் தண்­ட­னையும் 10,000 றிங்கிட் (2,445 டொலர்) தண்டப் பணமும் விதிக்­கப்­பட்­ட­தாக திங்­கட்­கி­ழ­மை­யன்று உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

மொஹமட் யாஸிட் கொங் அப்­துல்லாஹ் என்ற 52 வயது நபர் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­ட­தோடு, அவர் மீதான 11 குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் ஏற்றுக் கொண்டார். அவ­ரது பிணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 1998 ஆம் அண்டு கையொப்­ப­மி­டப்­பட்டு சட்­ட­மாக்­கப்­பட்ட தொடர்­பாடல் மற்றும் பல்­லூ­டக குற்­ற­வியல் கோவைக்கு எதி­ராக மலே­சிய மக்­க­ளி­ட­மி­ருந்து அதி­க­ரித்து வரும் சவால்­களின் பிந்­திய சம்­பவம் இது­வாகும்.

மிகச் சிறந்த முறையில் இவ்விடயம் கருத்திற் கொள்­ளப்­படா விட்டால் இந்த நிலைமை கோபத்தை ஏற்­ப­டுத்தும், இது தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்­த­லாக அமையும் என இந்த வழக்கின் சட்­ட­வா­தி­யான மொஹமட் அஷ்ரப் தெரி­வித்தார்.

குறித்த சட்டம் அமு­லுக்கு வந்­த­தி­லி­ருந்து நாடு முழு­வ­தி­லு­மி­ருந்து இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்பில் தமக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக மலே­சியப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சீன நப­ரான வாயி பூ சிங் என்ற 68 வய­தான நபர் சமூக ஊட­கத்தில் இறைத் தூதர் முகம்­மது நபியை அகௌ­ர­வப்­ப­டுத்தி கேலிச் சித்­தி­ர­மொன்றைப் பதி­வேற்­றி­யதைத் தொடர்ந்து மலே­சிய அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டது. குறித்த நபர் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.