மியன்­மாரில் கிளர்ச்­சிக்குழு தாக்­குதல் – ஒன்­பது பொலிஸார் பலி

0 627

மியன்­மாரில் பிரச்­சினை இடம்­பெறும் மேற்கு ராக்கைன் மாநி­லத்தில் கிளர்ச்­சிக்­கா­ரர்கள் நள்­ளி­ரவில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் ஒன்­பது பொலிஸார் பலி­யா­ன­தாக மியன்மார் அதி­கா­ரிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை உறுதி செய்­தனர்.

அரக்கான் இரா­ணுவம் என அழைக்­கப்­படும் ராக்கைன் இனக் கிளர்ச்சிக் குழு கடந்த சனிக்­கி­ழமை நள்­ளி­ரவில் மாநிலத் தலை­நகர் சிட்­டி­விக்கு அரு­கி­லுள்ள யொயேட்­யோட்டே கிரா­மத்தில் அமைந்­துள்ள பொலிஸ் நிலை­யத்தின் மீது தாக்­குதல் நடத்­தினர். குறித்த பிர­தே­சத்தில் பாது­காப்புப் படை­யினர் மற்றும் அர­சாங்க அதி­கா­ரிகள் மீது பல்­வேறு தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்ள இக் கிளர்ச்சிக் குழு இறு­தி­யாக நடத்­திய தாக்­குதல் இது­வாகும்.

தாக்­கு­தலின் போது பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்த ஒன்­பது பொலி­ஸாரும் கொல்­லப்­பட்­ட­தாக ராக்கைன் மாநில பொலிஸ் படை பிரதித் தலைமை அதி­காரி மஉங் மஉங் சோ உறு­திப்­ப­டுத்­தினார்.

சனிக்­கி­ழமை இரவு சுமார் நூறு அரக்கான் இரா­ணுவ கிளர்ச்­சிக்­கா­ரர்கள் பொலிஸ் நிலை­யத்தை சுற்றி வளைத்­த­தோடு பொலி­ஸாரை சர­ண­டை­யு­மாறு பணித்­தனர். அவ்­வாறு சர­ண­டைய அவர்கள் மறுத்­த­தை­ய­டுத்து மோதல் ஆரம்­பித்­தது.

துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி ஒன்­பது பொலி­ஸாரும் கொல்­லப்­பட்­டனர் என அவர் தெரி­வித்தார். ராக்கைன் மாநி­லத்­தி­லுள்ள பெரும்­பான்மை பௌத்­தர்­களைப் பிதி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்கும் அரக்கான் இரா­ணு­வத்தின் தாக்­கு­தல்கள் அம் மாநி­லத்தில் குறிப்­பாக வடக்குப் பகு­தி­களில் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

கடந்த ஜன­வரி மாதம் மியன்­மாரின் பங்­க­ளா­தே­ஷு­ட­னான எல்­லைக்கு அருகில் அமைந்­துள்ள நான்கு எல்லைக் காவல் நிலைய காவ­ல­ரண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதலின் போது குறைந்தது 13 பாதுகாப்புப் படையினர் அரக்கான் இராணுவத்தினால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராக்கைன் மாநிலத்தில் இராணுவம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையினையடுத்து பெரும்பாலும் ராக்கைன் பௌத்தர்களைக் கொண்ட சுமார் 10,000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.