முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மீது சாய்ந்தமருதில் தாக்குதல்

மு.கா. உறுப்பினரின் வீட்டுக்கும் கல் வீச்சு

0 681
  • எம்.எம்.ஏ.ஸமட், அஸ்லம் எஸ்.மௌலானா

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்­பா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி ஆரிப் சம்­சு­தீனின் வாகனம் மற்றும் முன்னாள் கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சாய்ந்­த­ம­ருது பிர­தேச அமைப்­பா­ள­ரு­மான எம்.ஐ.எம்.பிர்­தௌஸின் வீடு என்­பன நேற்­று­முன்­தினம் இரவு தாக்­கப்­பட்­டுள்­ளன.

இதனால் குறித்த வீட்டின் கதவு, ஜன்­னல்­களும் வாக­னத்தின் பின் கண்­ணா­டியும் சேத­ம­டைந்­துள்­ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சாய்ந்­த­ம­ருது 11ஆம் பிரி­வுக்­கான குழுக்­கூட்டம் பிர­தேச அமைப்­பா­ள­ரான முன்னாள் கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­ன­ரு­மான எம்.ஐ.எம்.பிர்­தௌஸின் வீட்டில் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போதே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.30 மணி­ய­ளவில் இச்­சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன.

இக்­கூட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தவி­சா­ளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான ஏ.எல்.அப்துல் மஜீத், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் இணைப்புச் செய­லா­ளரும் கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­ன­ரு­மான ரஹ்மத் மன்சூர் உள்­ளிட்ட கட்சிப் பிர­மு­கர்கள் பலரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

குறித்த கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப் சம்­சுதீன் சாய்ந்­த­ம­ருது அல்­ஹிலால் வீதியில் தனது வாக­னத்தில் பய­ணித்துக் கொண்­டி­ருந்­த­போது கூட்டம் இடம்­பெற்ற இடத்­திற்கு சமீ­ப­மாக வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப் சம்­சு­தீனின் வாகனம் தாக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­ப­வங்கள் தொடர்பில் இவர்கள் இரு­வரும் கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

தனது வீட்டின் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்­கொண்டு வீட்­டுக்கு சேதம் விளை­வித்தோர் சி.சி.டி.வி. மூலம் அடை­யாள காணப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இவர்­க­ளது பெயர் விப­ரங்­களை பொலி­சா­ருக்கு வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் முஸ்லிம் காங்­கி­ரஸின் சாய்ந்­த­ம­ருது பிர­தேச அமைப்­பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தெரி­வித்தார்.

இதே­வேளை, அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக எனது வாகனம் தாக்­கப்­பட்ட சம்­ப­வ­மா­னது எனக்கும் சாய்ந்­த­ம­ருது மக்­க­ளுக்கும் இருக்­கின்ற உற­வினை ஒரு­போதும் பாதிக்­காது என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இளைஞர் காங்­கிரஸ் தேசிய அமைப்­பா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி ஆரிப் சம்­சுதீன் தெரி­வித்தார்.

தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முஸ்லிம் காங்­கிரஸ் சாய்ந்­த­ம­ருது அமைப்­பாளர் பிர்­தௌஸின் தாயாரின் வீட்டில் கட்­சியின் வட்­டாரக் கிளைக்­குழு கூட்டம் நடை­பெற்­றது.

இதற்கு நான் சமு­க­ம­ளித்­த­போது, பிழை­யாக வழி­ந­டத்­தப்­பட்ட சில இளை­ஞர்கள் கூட்­டத்தைக் குழப்­பிக்­கொண்­டி­ருந்த நிலையில் எனது வாக­னத்தின் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தினர். இதனால் எனது வாக­னத்தின் பின் கண்­ணாடி முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளது.

ஒரு­பக்கம் இன­வா­தத்­தாலும் மறு­பக்கம் பிர­தே­ச­வா­தத்­தி­னாலும் அழிந்­து­போகும் ஆபத்தில் இருக்­கின்ற கல்­மு­னையின் அடை­யாளம் இன்னும் சில காலங்­க­ளுக்­கா­வது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்ற நல்­லெண்­ணங்­க­ளுடன் பாடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற எனது பய­ணத்தில் இவ்­வா­றான நிகழ்­வு­களை எதிர்­பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

கல்முனையின் அடையாளமும் முஸ்லிம் தேசியத்தின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விடயங்களாகும். இளைஞர் சமுயதாயத்தை பிழையாக வழிநடத்துபவர்கள் எவ்விதமான போர்வையில் இருந்தபோதும், சமூகமும் எதிர்காலமும் அவர்களை திட்டவட்டமாக சரியாகக் கணிக்கும். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்தவேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.