கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

0 1,029
  • ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள்.

அன்று தங்கள் வீடு­களும், கடை­களும், வர்த்­தக நிலை­யங்­களும், பள்­ளி­வா­சல்­களும் தீயினால் கரு­கிய காட்­சிகள் இன்றும் அம்­மக்­களை அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

தங்­க­ளது சொத்­துக்­க­ளுக்கும், தீயினால் எரி­யுண்ட வீடு­க­ளுக்கும், கடை­க­ளுக்கும் நஷ்­ட­ஈடு கிடைக்கும் என்று எதிர்­பார்த்து இன்­றுடன் 368 நாட்­களை அவர்கள் கடத்தி விட்­டார்கள்.

ஆனால் முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை எரித்­த­வர்கள், இரு உயிர்­களைப் பறித்­த­வர்கள் சுதந்­தி­ர­மாக உலாவ விடப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் விளக்­க­ம­றியல் என்ற பெயரில் தடுத்து வைக்­கப்­பட்டு தற்­போது வெளியில் விடப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­குகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

வன்­முறை சம்­ப­வங்­களின் பாதிப்­புகள்

2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளினால் கண்டி மாவட்­டத்தில் 527 முஸ்லிம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டன. இக்­கு­டும்­பங்­களைச் சேர்ந்த 2635 பேர் நிர்க்­க­திக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டதால் அவர்கள் மாதக்­க­ணக்கில் உற­வி­னர்கள் வீடு­க­ளிலும், நண்­பர்­களின் தய­விலும் வாழ வேண்­டி­யேற்­பட்­டது.

259 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் 30 வீடுகள் முற்­றா­கவும் சேத­ம­டைந்­துள்­ள­தாக தர­வுகள் தெரி­விக்­கின்­றன. முஸ்­லிம்­களின் 37 கடைகள் முற்­றாக எரிக்­கப்­பட்­டன. 180 கடைகள் பகு­தி­ய­ளவில் சேதங்­க­ளுக்­குள்­ளா­கின. 80 க்கும் மேற்­பட்ட வாக­னங்கள் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டன. இவற்றில் அரை­வா­சிக்கும் மேல் முற்­றாக எரிக்­கப்­பட்­டன.

அன்­றைய வன்­செ­யல்­களின் போது இன­வா­திகள் பள்­ளி­வா­சல்­க­ளிலும் கை வைத்­தனர். 17 பள்­ளி­வா­சல்கள் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இவற்றில் ஒரு பள்­ளி­வாசல் முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்­டது. அன்­றைய தினம் திகன பிர­தேசம் முழு­மை­யான யுத்த பிர­தேசம் போன்றே காட்­சி­ய­ளித்­தது.

வன்­மு­றை­க­ளுக்­கான காரணம்

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இந்த வன்­செ­யல்­க­ளுக்கு காரணம் எமது முஸ்லிம் இளை­ஞர்கள் நால்­வரின் செயற்­பா­டு­களே யாகும் என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது. சிறி­யதோர் வாகன விபத்து தொடர்­பாக இடம்­பெற்ற வாக்­கு­வா­தமே பல­கோடி ரூபா இழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இரு­வரின் உயிர்­களைக் காவு கொண்­டி­ருக்­கி­றது. அத்­தோடு பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சாரதி தாக்­கப்­பட்டு பின்பு வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்­தி­ருக்­கிறார்.

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 22 ஆம் திகதி நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டி­யுடன் பெரும்­பான்மை இனத்­தவர் ஒருவர் செலுத்­திய லொறி மோதி­ய­தனால் ஏற்­பட்ட வாக்­கு­வா­தமே இந்த அழி­வு­க­ளுக்குக் கார­ணமாய் அமைந்­துள்­ளது.

2018 பெப்ரவரி 22 ஆம் திகதி இரவு தெல்­தெ­னிய எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு முன்பு ஏற்­பட்ட இந்த வாக்­கு­வா­தத்தின் போது முஸ்லிம் இளை­ஞர்­களால் லொறி சார­தி­யான தெல்­தெ­னிய அம்­பால கிரா­மத்தைச் சேர்ந்த எச். குமா­ர­சிறி (48) தாக்­கப்­பட்டார்.

காயங்­க­ளுக்­குள்­ளான அவர் முதலில் தெல்­தெ­னிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்பு கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கால­மானார். நான்கு முஸ்லிம் இளை­ஞர்­களும் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். பெரும்­பான்மை இன சார­தியின் மர­ணத்­துக்கு முஸ்லிம் இளை­ஞர்­களே கார­ண­மாக இருந்­ததால் அப்­ப­குதி பெரும்­பான்மை இனத்­த­வர்கள் திகன பகு­தியில் தாக்­கு­தல்­களை நடத்த திட்­ட­மிட்­டனர். இர­க­சி­ய­மான முறையில் தாக்­குதல் திட்­ட­மி­டப்­பட்­டது. முஸ்­லிம்­களைத் தாக்­கு­வ­தற்­காக இன­வாதக் கருத்­துக்கள் ஒரு சிலரால், பெரும்­பான்மை இன அமைப்­பு­களால் பொது மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டன. இதுவே வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு கார­ணமாய் அமைந்­தன.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி, சார­தியின் பிரேத அடக்கம் நடை­பெ­ற­வி­ருந்­தது. அன்­றைய தினத்­துக்கு முன்பு 4 ஆம் திகதி இரவு இறந்த சார­தியின் கிரா­ம­மான அம்­பால சந்­தியில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான பாரிய வர்த்­தக நிலையம் தாக்­கப்­பட்டு தீயி­டப்­பட்­டது. இச்­சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் பேரில் 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது அவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

சார­தியின் பிரேதம் ஊர்­வ­ல­மாக எடுத்துச் செல்­லப்­ப­டு­வ­தற்கு மேற்­கொண்ட முயற்சி பொலி­ஸாரால் தடை செய்­யப்­பட்­டது. அவ­ரது சொந்த ஊரிலே பிரதம் அடக்கம் செய்­யப்­பட்­டது. என்­றாலும் அன்­றைய தினம் மார்ச் 5 ஆம் திகதி பெரும்­பான்மை இனத்­த­வர்கள் வெற்றுப் பிரேத பெட்­டி­யுடன் ஊர்­வலம் வந்­த­போது தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டனர்.

தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­வதை அறிந்து கொண்ட முஸ்­லிம்­களில் அநேகர் தங்கள் வீடு­க­ளையும், கடை­க­ளையும் கைவிட்டு வேறு பகு­தி­களில் உள்ள உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் வீடு­களில் தஞ்­ச­ம­டைந்­தனர். இத­னா­லேயே ஒரு உயி­ரி­ழப்­புடன் பாது­காத்துக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

தனது எரியும் வீட்டில் சிக்கிக் கொண்ட சம்­சுதீன் அப்துல் பாசித் (24) மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழந்தார்.

கண்டி ஹீரஸ்­ஸ­க­லயைச் சேர்ந்த மௌலவி சத­கத்­துல்லா அக்­கு­ற­ணைக்குச் சென்று பஸ் வண்­டியில் திரும்பிக் கொண்­டி­ருந்­த­போது மார்ச் 7 ஆம் திகதி இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு சில மாதங்கள் சுய­நி­னை­வற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கால­மானார்.

நஷ்­ட­ஈட்டுக் கோரிக்கை

கண்டி, திகன பகு­தி­களில்  இடம் பெற்ற வன்­செ­யல்­களை அடுத்து 546 சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பங்கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இவற்றில் 372 சொத்­துக்­க­ளுக்கே இது­வரை நஷ்­ட­ஈடுகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வன்­செ­யல்­க­ளினால் மக்­களும் மக்­க­ளது சொத்­துக்­களும் பாதிக்­கப்­பட்டு ஒரு வரு­டத்­துக்கும் மேலா­கியும் 174 சொத்­துக்­க­ளுக்கு இது­வரை நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை.

நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதற்­கான அங்­கீ­கா­ரத்தை இது­வரை அமைச்­ச­ரவை வழங்­காமை கவ­லை­தரும் விட­ய­மாகும். சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பலம் வாய்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இவ்­வி­ட­யத்தில் மௌன­மாக இருப்­பது ஏனென்று தெரி­ய­வில்லை. நஷ்­ட­ஈ­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் செயற்­பா­டுகள் மந்­த­க­தி­யிலே இருக்­கின்­றன.  அதி­காரம் மிக்க பிர­தமர் பத­வியை வகிக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே புனர்­வாழ்­வுக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக இருக்­கிறார். என்­றாலும் உறு­தி­மொ­ழிகள் வார்த்­தை­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே இருக்­கி­றது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கண்டி, திகன பகு­தி­களில் இடம் பெற்ற வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கோரி 546 விண்­ணப்­பங்கள் புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பைக்கு கிடைத்­துள்­ளன. அவற்றில் 372 சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ஈடு வழங்­கப்­பட்டு விட்­டன.

174 சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. அதன் விப­ரங்கள் அருகிலுள்ள அட்டவணையில்.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை 372 சொத்துக்களுக்கு 19 கோடி 8 இலட்சத்து 45 ஆயிரத்து 392  ரூபா நஷ்டஈடு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 174 சொத்துக்களுக்கு 17 கோடி 56 இலட்சத்து 7 ஆயிரத்து 64 ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையே வழங்க வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த விபரங்களை நாம் முன்வைக்கிறோம். அவர்கள் செயற்றிறன் மிக்கவர்களாக சமூக நலனில் அக்கறையுள்ளவர்களாக மாறுவார்களா-?

தலா ஒரு இலட்­சத்­துக்­குட்­பட்ட நஷ்­ட­ஈ­டு­களைக் கொண்ட 372 சொத்­து­க­ளுக்கு முழு­மை­யான நஷ்ட ஈடுகள் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் எஞ்­சி­யுள்ள 174 சொத்­து­களின் இழப்­பீ­டுகள் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்­ட­வை­யாகும். இவற்றுள் 145 சொத்­து­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபா­ வீதம் பகு­தி­ய­ளவு நஷ்ட ஈடு­வ­ழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு 14 கோடியே ஒரு இலட்­சத்து 71 ஆயி­ரத்து 900 ரூபா­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த 145 சொத்­து­களும் பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் ரீதியில் பின்­வ­ரு­மாறு அமைத்­துள்­ளன. அக்­கு­றனை11  பூஜா­பிட்­டிய 21, குண்­ட­சாலை 60, பாத்­த­தும்­பற14, ஹாரிஸ்­பத்­துவ 28, யடி­நு­வர 3, கண்டி நக­ரமும் கங்­க­வட்ட கோறளையும் 5, மினிப்பே 1, மெத­ம­ஹ­நு­வர 2.

வன்­செ­யல்கள்; சந்­தேக நபர்கள்

கண்டி திகன வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்­ட­வர்­களில் 34 பேர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்­கெ­தி­ரான விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. இவர்­களில் இருவர் பிர­தான சந்­தேக நபர்­க­ளாவர். அவர்கள் மஹாசோன் பல­காயவின் தலைவர் அமித் ஜீவன் வீர­சிங்க மற்றும் கும்­புரேகம சோபித தேரர் என்­போர்­க­ளாவர். முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­களில் பௌத்த மத குரு ஒரு­வரும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­மையை இது உறுதி செய்­கி­றது. பாதிக்­கப்­பட்ட திகன முஸ்­லிம்கள் தரப்பில் ஆலோ­சனை மற்றும் நல்­லி­ணக்­கப்­பே­ரவை (ARC) யின் சட்­டத்­த­ர­ணிகள் வழக்கில் ஆஜ­ராகி வரு­கின்­றனர். ஏனைய பிர­தேச வன்­செயல் களினால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் தரப்பில் கண்டி சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராகி வரு­கின்­றனர்.

சமூக அமைப்­புகள் உதவி

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கண்டி நிவா­ரண மத்­திய நிலையம் (KRCC) நிதி­யு­த­வி­களை வழங்கி அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளமை பாராட்­டத்­தக்­கது. அர­சாங்கம் நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வதில் கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­களை தமது சொந்­த­வீ­டு­களில் மீளக் குடி­ய­மர்த்­தவும், வர்த்­த­கங்­களை ஆரம்­பிக்­கவும் 90 மில்­லியன் ரூபா நிதி­யு­தவி வழங்­கி­யுள்­ள­தாக கண்டி மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தெரி­வித்தார். இந்த 90 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வியில் 55 மில்­லியின் ரூபா திகன பகு­தியைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன என்றும் அவர் கூறினார்.

கண்டி மாவட்ட உலமா சபை, கண்டி மஸ்ஜித் சம்­மே­ளனம், கண்டி முஸ்லிம் வர்த்­த­கர்கள் சங்கம், யங்­பிரண்ட்ஸ் மற்றும் சிவில் சமூக அமைப்­புகள் இணைந்து இந்த நிதி­யு­த­வி­யினை வழங்­கி­யி­ருந்­தன.

இரா­ணுவம் சுத்­தி­க­ரிப்புப் பணி­க­ளையே மேற்­கொண்­டது

கண்டி, திகன வன்­செ­யல்கள் இடம்­பெற்று இரு தினங்­களில் பின்பு அன்­றைய இரா­ணுவ தள­பதி உயர் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கண்­டிக்கு வந்து, கண்டி லைன் பள்­ளி­வா­சலில் வன்­செயல் நிலைமை குறித்து முஸ்லிம் பிர­நி­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தினார். கண்டி மஸ்ஜித் சம்­மே­ளன பிர­தி­நி­தி­களும் கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

கலந்­து­ரை­யாடல் நடந்து கொண்­டி­ருந்­த­போது இரா­ணு­வத்­த­ள­பதி – ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கைய­டக்கத் தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்­பு­கொண்டார். பின்பு வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளையும், வர்த்­தக நிலை­யங்­க­ளையும் இரா­ணு­வத்­தினால் புனர்­நிர்­மாணம் செய்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் இரா­ணுவம் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை. துப்­பு­ரவு நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ரமே இரா­ணு­வத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­கிறார் கண்டி மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக்.

அளுத்­க­மயில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளையும், வர்த்­தக நிலை­யங்­க­ளையும் இரா­ணு­வத்­தினர் புனர்­நிர்­மாணம் செய்­து­வ­ழங்­கினர். ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இது நடை­பெ­ற­வில்லை. வெறும் உறு­தி­மொ­ழி­களே வழங்­கப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­குவோம் என்று ஆட்­சி­பீ­ட­மே­றி­ய­வர்கள் கண்டி, திகன சம்­ப­வங்­களை உடன் தடுத்து நிறுத்தத் தவ­றி­விட்­டார்கள்.

பின்­னணி என்ன?

தெல்­தெ­னிய அம்­பால கிரா­மத்தைச் சேர்ந்த லொறி சாரதி கண்டி வைத்­தி­ய­சா­லையில் கால­மா­கி­ய­தை­ய­டுத்து அம்­பால பன்­ச­லைக்கு பொறுப்­பான பேர­கெட்­டிய தேரர் முஸ்­லிம்­க­ளுக்கும், சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கா­திருப் பதற்­காக ஏற்­பா­டு­களை மேற்­கொண்டார். அவர் அம்­ப­க­ஹ­லந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலில் திகன பிர­தே­சத்து ஊர்ப்­பி­ர­மு­கர்­களைச் சந்­தித்­தித்தார். கண்டி மஸ்ஜித் சம்­மே­ளன பிர­தி­நி­தி­களும் கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­பற்­றினர்.

கால­மான லொறி சார­தியின் குடும்­பத்­துக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சுமார் ஒரு மில்­லியன் ரூபா வழங்­கு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. முதற்­கட்­ட­மாக இறு­திக்­கி­ரியை செல­வு­க­ளுக்கு 2 இலட்சம் ரூபா வழங்­கு­வ­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்டு அப்­பணம் ஏற்பாடு செய்யப்பட்டாலும் சார­தியின் குடும்­பத்­தினால் இது நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

கண்டி திகன வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் மஹசோன் பல­காய உட்­பட பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த தீவி­ர­வாத அமைப்­புகள் செயற்­பட்­டுள்­ளன. ஒரு சில அர­சியல் வாதி­களும் இத­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ளனர். முஸ்­லிம்­களின் சொத்­துக்­களைக் கொள்­ளை­யிட்டு அழிக்­க­வேண்டும் என ஒரு தரப்பு கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றது.

இன­வா­தக்­க­ருத்­துகள் பெரும்­பான்மை மக்கள் மீது திணிக்­கப்­பட்­ட­மையே இந்த வன் செயல்கள் உரு­வாகக் கார­ண­மாகும். முஸ்லிம் இளை­ஞர்­களின் செயலே இந்த வன் செய­லுக்கு அடித்­தளம் இட்­டுள்­ளது. எனவே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயல்கள் உரு­வா­கா­ம­லி­ருக்க பிர­தே­சங்கள் தோறும் நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். இதற்­காக ஒவ்வோர் பிர­தே­சங்­களின் மதகுரு­மார்­களின் ஒத்­து­ழைப்பு பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டு 5ஆம் திகதி வன் செயல்கள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர்  ஞான­சார தேரரும் மர­ண­வீட்­டுக்குச் சென்று வீட்­டா­ருக்கு ஆறுதல் தெரி­வித்தார். கவ­லையை வெளி­யிட்டார். இவ்­வா­றான அமைப்­பு­களைச் சேர்ந்த இன­வாதம் கொண்டோர் மக்­களை வன்­செ­யல்­க­ளுக்­காகத் தூண்­டி­யி­ருக்­கலாம்.

கடு­மை­யான தண்­டனை வேண்டும்

வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் அவர்கள் எந்தச் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இவ்­வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மாக இருந்த லொறி­சா­ர­தியைத் தாக்கி அவ­ரது மர­ணத்­துக்குக் கார­ண­மாக இருந்த நான்கு முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு எதிர்­வரும் மே மாதம் 20 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அத்தோடு மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க, கும்புரேகம சோபித்ததேரர் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாகவுள்ளது. இவர்களே வன்முறையின் சூத்திரதாரிகளாவர்.

நல்லிணக்கம் உறுதிசெய்யப்பட வேண்டும்

வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், சொத்­து­க­ளுக்கும் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­துடன் மாத்­திரம் அர­சாங்கம் மௌனித்­து­வி­டக்­கூ­டாது. அப்­பி­ர­தே­சங்­களில் இன நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். ஏனென்றால் முஸ்­லிம்கள் தம்மைத் தாக்­கிய, சொத்­து­களை அழித்த பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளு­டைய சுற்­றா­டலில் தொடர்ந்தும் வாழ­வேண்­டி­யுள்­ளது. எனவே நல்­லி­ணக்கம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இப்­ப­ணியில் அரசுடன் சேர்ந்து சிவில், சமூக இயக்கங்கள் கைகோர்க்கவேண்டும்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.