இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி நசிர்தீன்

0 747

காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என காத்­தான்­குடி சுகாதார வைத்­திய அதி­காரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர்  விடுத்­துள்ள அறிக்­கையில்   தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தினமும்  முறைப்­படி எம்மால் பரி­சோ­திக்­கப்­பட்ட பின்­னரே மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­துடன் சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்­வித அச்­சமும் கொள்ளத் தேவை­யில்லை என டாக்டர் யூ.எல்.நசு­றுத்தீன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து காத்­தான்­கு­டிக்குள் இறைச்சி கொண்டு வரு­வது முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி மாடு­களை அறுக்கும் மடு­வத்தில் மாடுகள் 24 மணி நேரம் அங்கு வைக்­கப்­பட்டு பரி­சோ­த­னைக்­குப்­பின்­னரே அறுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் மாடு­களை அறுப்­ப­தற்கு ஒரு நாளைக்கு முன்பும் ஒரு மணி நேரத்­திற்கு முன்பும் எமது பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளினால் பரி­சோ­தனை செய்­யப்­பட்ட பின்­னரே மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­தி­க்கப்ப­டு­கின்­றன.

ஏனைய பிர­தே­சங்­களில் இருந்து இறைச்­சிகள் காத்­தான்­கு­டிக்கு கொண்டு வரு­வது முற்­றாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

வெளி­யூர்­களில் இருந்து கொண்டு வரப்­படும் இறைச்­சி­களை காத்­தான்­கு­டி­யி­லுள்ள சிற்­றுண்டிச் சாலைகள், உண­வ­கங்கள் பயன் படுத்தக் கூடாது என எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­கு­டிக்கு வெளியூரிலிருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்திய கடைக்காரரின் வியாபார உரிமம் தற்காலிகமாக இட நிறுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.