சிரியா வான் தாக்குதலில் நால்வர் பலி

0 610

கடந்த சனிக்­கி­ழமை சிரி­யாவின் வட­மேற்கு இட்­லிப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட வான் தாக்­கு­தலில் குறைந்­தது 4 பொது­மக்கள் உயி­ரி­ழந்­த­தாக வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

இட்­லிப்பின் ஜிஸ்ர் அல்-­சுகுர் மாவட்­டத்தில் முன்னர் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் பாதிக்­க­ப்பட்­டோரை தேடிக் கண்­டு­பி­டித்து மீட்கும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த சிவில் பாது­காப்பு அணி­யி­னரை இலக்கு வைத்து போர் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தி­ய­தாக தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ர­கத்தின் தலைமை அதி­காரி முஸ்­தபா ஹஜ் யூஸுப், துருக்­கிய செய்தி நிறு­வ­ன­மான அன­டொலு முக­வ­ர­கத்­திற்குத் தெரி­வித்தார்.

சிவில் பாது­காப்பு தொண்டர் ஒருவர் உட்­பட நான்கு பொது­மக்கள் இத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­தா­கவும், மேலும் இரண்டு சிவில் பாது­காப்பு தொண்­டர்கள் பார­தூ­ர­மாகக் காய­ம­டைந்­த­தா­கவும் ஹஜ் யூஸுப் தெரி­வித்தார்.

ரஷ்­யாவின் எஸ்யூ 34 யுத்த விமானம் கெமீமெம் விமானத் தளத்­தி­லி­ருந்து புறப்­பட்டுச் சென்­ற­தாக எதிர்த்­த­ரப்பு விமானக் கண்­கா­ணிப்­பா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் பஷர் அல்-­அ­சாத்தின் அர­சாங்­கமும், ஈரானைப் பின்­ன­ணி­யாகக் கொண்டு இயங்­கி­வரும் பயங்­க­ர­வாதக் குழுக்­களும் இட்­லிப்பின் பொது­மக்கள் குடி­யி­ருப்புப் பிர­தே­சங்கள் மீது பாரிய குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்திவரு­கின்­றன.

மாலை நேரங்­களில் பஷர் அல்-­அ­சாத்தின் அர­சாங்க வான் படை­யினர் வான் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றனர். 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இட்­லிப்பில் அரச படையினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 116 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 342 இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந் துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.