2019 ஹஜ் விவகாரம் QR குறியீடு பெற்றோர் முகவர் ஒருவரிடம் பதியலாம்

0 685

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு QR குறியீடு பெற்­றுக்­கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் 25 ஆம் திக­திக்கு முன்பு ஹஜ் முகவர்  நிலை­ய­மொன்­றினைத் தேர்ந்­தெ­டுத்து தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்­து­கொள்ளும் போது வழங்­கப்­படும் சேவைகள், சவூதி அரே­பி­யாவில் வழங்­கப்­படும் ஹோட்டல் வச­திகள் என்­பன தொடர்பில் ஒப்­பந்­த­மொன்­றினைச் செய்து கொள்­ளு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

ஹஜ் யாத்­தி­ரைக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் முகவர் நிலை­யங்­களில் தங்கள் பய­ணத்தை உறுதி செய்யத் தவறும் நிலையில் பய­ணத்­துக்­காகக் காத்­தி­ருக்கும் பட்­டி­யலில் இருக்கும் விண்­ணப்­ப­தா­ரிகள் மூலம் வெற்­றி­டங்கள் நிரப்­பப்­படும் எனவும் அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.