எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி

149 பய­ணிகள், 8 ஊழி­யர்கள் உள்­ள­டக்கம்

0 690

எத்­தி­யோப்­பி­யாவில் இருந்து கென்ய தலை­நகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று விபத்தில் சிக்­கி­யது. இதில் பய­ணித்த 149 பய­ணிகள், 8 ஊழி­யர்கள் என மொத்தம் 157 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டுச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மீட்புப் பணிகள் துரி­த­மாக இடம்பெற்று வரு­கின்ற நிலையில், உயிரிழந்தவர்­களின் குடும்பத்தினருக்கு அந்­நாட்டு ஜனா­தி­பதி அலுவ­லகம் அனுதா­பங்­களை தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆபி­ரிக்க நாடு எத்­தி­யோப்யா. இந்த நாட்டின் தலை­நகர் அடிஸ் அபா­பாவில் இருந்து எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான போயிங் 737 விமானம் 149 பய­ணிகள், 8 ஊழி­யர்­க­ளுடன் நேற்று காலை கென்யா தலை­நகர் நைரோபி நக­ருக்கு புறப்­பட்­டது.

இந்­நி­லையில், நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்­துக்­குள்­ளா­னது. இந்த விபத்தில் விமா­னத்தில் பய­ணித்த 149 பய­ணிகள் மற்றும் 8 ஊழி­யர்கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக எத்­தி­யோப்­பிய ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

எத்­தி­யோப்­பியா பிர­தமர் அபி அக­மது அலு­வ­லகம் வெளி­யிட்ட அறி­விப்பில், ” எத்­தி­யோப்­பியா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமான விபத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களை பிரிந்து வாடும் குடும்­பத்­தி­ன­ருக்கு எங்­க­ளு­டைய ஆழ்ந்த இரங்­கல்கள் ” எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் விமானம் வெளி­யிட்ட அறி­விப்பில், ” எத்­தி­யோப்­பியா தலை­நகர் அடிடிஸ் அபாபா நகரில் இருந்து நைரோபி நகர் நோக்கிச் சென்ற எதி 302 என்ற விமானம் விபத்தில் சிக்­கி­யது

இன்று (நேற்று) காலை உள்ளூர் நேரப்­படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்­தி­யோப்­பியா  விமானம் புறப்­பட்­டது.

நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகு­திக்குப் பின் விமா­னத்தின் சிக்னல் கிடைக்­க­வில்லை என்­பதால், இங்கு விபத்து நடந்­துள்­ளது.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் உயிரோடு இருப்பவர்கள் குறித்த எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.