இந்தேனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் தங்கச் சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முன்னாயத்த முகவரகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விபத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ, கடந்த சனிக்கிழமை தொடக்கம் மேலும் ஏழு உடல்கள் கண்டெடுக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணியாளர்கள் இதுவரை 18 பேரை உயிருடன் மீட்டுள்ளனர் எனவும் நுக்ரோஹோ தெரிவித்தார். அனுமதி பெறப்படாத சுரங்கமொன்றில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்ற சரிவில் எண்ணிக்கை தெரியாத அளவில் பணியாளர்கள் சிக்குண்டனர்.
தேடுதல் பணிகள் எதிர்வரும் மார்ச் 11 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி