அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டு

0 662

முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ருதி பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை பதிவு செய்­வதே எமது நிரந்­தரப் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­மாக அமையும் எனவும் இன்­றைய காலத்தைப் பொறு­வத்­த­வ­ரை­யிலும்  எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கு­மென்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால்­துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமயம் கலா­சாரம் மற்றும் தபால்­துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் உடு­நு­வர மற்றும் யட்­டி­நு­வர ஆகிய இரு தேர்தல் தொகு­தி­களை ஒன்­றி­ணைத்து நடத்­தப்­பட்ட நட­மாடும் சேவை கடந்த சனிக்­கி­ழமை தவு­ல­கல வஹங்கே  அல்-அ­றபா மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வுக்கு தலை­மை­தாங்கி உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் உரை­யாற்றும் போது மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்­நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைப் பற்றி ஒரு சரி­யான  கவ­னத்தை கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. ஆரம்ப காலங்­களில் இதற்கு அமைச்­சர்­க­ளாக எம். எச். முஹமட்,  எம். எச். எம். அஷ்ரப்,  அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர், அதைத் தொடர்ந்து சில சிங்­கள அமைச்­சர்­மார்­களின் கீழ் செயற்­பட்டு வந்­தது. அந்­தந்தக் காலங்­களில் சூழல் தேவைக்­கேற்ப செயற்­பட்­டது. எனினும், அக்­கால கட்­டத்­தையும் இக்­கால கட்­டத்­தையும் ஒப்­பிட்டுப் பார்க்­கும்­போது இன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மீது பாரிய பொறுப்­பி­ருக்­கி­றது.

இந்­நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் முஸ்­லிம்கள் பல­வி­த­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வாழக்­கூ­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலைமை இருக்­கி­றது.  எனவே இன்­றைய காலத்தைப் பொறு­த்­த­வ­ரை­யிலும் நாங்கள் எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மிகவும் சிறிய இடத்தில் அமைந்­தி­ருந்­தது. இதனை விஸ்­த­ரித்து பெரிய கட்­டிடத் தொகு­தியில் நிர்­மா­ணித்து அதை மாற்­றி­ய­மைத்­துள்ளோம். இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்­கவைச் சந்­தித்து கதைத்த போது அவர் 296 மில்­லியன் ரூபா நிதி உத­வியை வழங்கி அமைச்சின் கட்­டிடத் தொகு­தியை நிர்­மா­ணித்து திறந்து வைக்­கும்­படி கூறினார். அந்த வகையில் அதற்­கு­ரிய கட்­டி­டத்தில்  முஸ்லிம் சமய கலா­சார அமைச்சு இன்று இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

கண்டி மாவட்­டத்தில்  முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் அக்­கு­றணை பிர­தே­சத்­திற்கு அடுத்­த­த­தாக உடு­நு­வரப் பிர­தேசம் திகழ்­கி­றது. அன்­றைய கால­கட்­டத்தில் தங்­க­ளு­டைய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக அலு­வ­லகம் வந்­த­போது இட­வ­ச­தி­யின்மை அன்று காணப்­பட்­டது. ஆனால் அந்த நிலைமை மாறி இன்று ஒரு அழ­கிய தோற்­றத்­தி­லுள்ள கட்­டி­டத்தில் எமது சகல அலு­வ­லக வேலை­களை செய்து கொண்­டி­ருக்­கின்றோம்.

கடந்த காலங்­க­ளிலே எமது பள்­ளி­வா­சல்கள் பல்­வேறு இடங்­க­ளிலும் தாக்­கப்­பட்­டன.  அப்­போது நாங்கள் சொந்த நாட்டில் அநா­தை­க­ளாக இருக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்தோம். இறை­வனைத் தவிர எம்மைப் பாது­காப்­ப­தற்கு இந்­நாட்டில் ஆட்­சி­யா­ளர்கள் எவரும் இருக்க வில்லை.  எமக்கு உதவ எவரும் முன்­வ­ரவும் இல்லை. இப்­ப­டி­யான ஓர் இக்­கட்­டான சூழ்­நி­லை­யி­லேயே வாழ்ந்­தி­ருந்தோம். கடை­சி­யாக நீதி கேட்டு நீதி­மன்றம் சென்ற போது அன்று நீதிமன்­றங்­க­ளிலே எங்­களைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சலா என்­ப­தாகும். துர­தி­ஷ்­ட­வ­ச­மாக அநே­க­மான பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்த அவல நிலையைக் கருத்திற் கொண்­டுதான் பள்­ளி­வா­சல்கள் கட்­டாயம் பதிவு செய்­யப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்றேன். பள்­ளி­வாசல்கள் மட்­டு­மல்ல குர்ஆன் மத்­ர­ஸாக்கள், தைக்காப் பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரிகள் ஆகிய அனைத்­தையும் நாங்கள் பதிவு செய்­து­கொள்ள வேண்டும்.

அக்­கால கட்­டத்தில் பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­வதில் பல சிர­மங்கள் இருந்­தன. அப்­போது பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­வ­தாக இருந்தால் பல­வி­த­மான ஆண­வங்கள் கோரப்­பட்­டன. விசே­ட­மாக அரு­கி­லுள்ள பௌத்த விஹா­ரையின் கடிதம் அப்­போது தேவைப்­பட்­டது.  இப்­படி  பள்­ளி­வாசல் பதிவு செய்­வ­தாக இருந்தால் பல­வி­த­மான ஆவ­ணங்கள் சமர்­பிக்க வேண்டும். இவை அனைத்­தையும் நீக்கி மிக இல­கு­வான முறையில் அந்தப் பள்­ளி­வா­ச­லுக்­கு­ரிய காணி உறு­தி­யி­ருந்தால் மட்டும் போது­மென்ற வகையில் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தற்கு விசே­ட­மான சலு­கை­யினை வழங்கி ஒரு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். ஆனால் எமது சமூகம் இதனைப் பெரி­ய­ளவில் கவ­னத்தில் கொள்­வ­தில்லை என்று அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் கலந்து கொண்டனர்.  25 புதிய பள்ளிவாசல்கள் பதிவு செய்யவும்,  14 புதிய நிர்வாகத் தெரிவை பதிவு செய்யவும், 3 பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். எம். மலிக், முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் பணிப்பாளர் ஏ. பீ. எம். அஷ்ரப் அமைச்சரின் உயரதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.