ஜெரூசலத்திலுள்ள அமெரிக்காவின் துணை தூதரகத்துக்கு எதிராக மலேஷியா கண்டனம்

0 795

ஜெரூ­ச­லத்­தி­லுள்ள அமெ­ரிக்­காவின் துணைத் தூத­ர­கத்­தினை தனது தூத­ர­கத்­தோடு ஒன்­றி­ணைக்கும்  தீர்­மா­னத்­திற்கு மலே­ஷியா கடந்த திங்­கட்­கி­ழமை கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யிட்­டது.

அமெ­ரிக்­காவின் இந்த செயற்­பாடு பலஸ்­தீன – இஸ்­ரே­லிய முரண்­பாட்டில் இணைப்­பா­ள­ராக செயற்­ப­டு­வதன் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் சந்­தே­கத்­தினை தோற்­று­விப்­ப­தோடு மத்­தி­ய­கி­ழக்கின் ஒட்­டு­மொத்த எதிர்ப்­பி­னையும் ஏற்­ப­டுத்­து­மெனத் தெரி­வித்­துள்ள மலே­ஷியா இந்த நகர்வு பலஸ்­தீ­னத்­திற்கும் அதன் மக்­க­ளுக்கும் எதி­ராக எடுக்கப்­பட்ட துர­திஷ்­ட­மான நட­வ­டிக்கை எனவும் வர்­ணித்­துள்­ளது.

பலஸ்­தீ­னத்­து­ட­னான பிர­தான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களைக் குறைக்கும் வகையில் ஜெரூ­ச­லத்­தி­லுள்ள தனது துணைத் தூத­ர­கத்தை மூடி­விட்டு அதனை தூத­ர­கத்­துடன் இணைப்­ப­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்கா அறி­வித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை இந்த செயற்­பாடு அமு­லுக்கு வந்­துள்ள நிலையில் 175 வரு­ட­கால வர­லாறு முடி­வுக்கு வந்­துள்­ளது. பலஸ்­தீ­னத்­து­ட­னான அமெ­ரிக்க உற­வு­களைக் கையாளும் பொறுப்பு வொஷிங்­டனின் இஸ்­ரே­லுக்­கான தூதுவர் டேவிட் பிரைட்­மே­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இது அமெ­ரிக்­காவின் கபட நாட­க­மெனத் தெரி­வித்­துள்ள மலே­ஷியா, சர்­வ­தேச சமூ­கத்தின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்­றுள்ள இரு நாடுகள் என்ற தீர்­வுக்கு சாவு­ம­ணி­ய­டிக்கும் செயற்­பா­டாகும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

1967 ஆம் ஆண்டு இருந்த எல்­லை­க­ளுடன் இரு நாடுகள் என்ற தீர்வுக்கு மலேஷியா ஆதரவாக இருப்பதாகவும், சமாதான முன்னெடுப்புக்களை குலைப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.