ஜும்ஆப் பிரசங்கங்களை சிங்களத்திலும் நிகழ்த்த திட்டம்

0 638

பள்­ளி­வா­சல்­களில் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு ஆயுதப் பயிற்சி தொடர்­பான உரைகள் நிகழ்த்தப்­ப­டு­வ­தாக பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பொய் பிர­சாரம் செய்து வரு­வதை நிறுத்­து­வ­தற்­காக சிங்­கள மொழி­யிலும் ஜும்ஆ பிர­சங்­கங்­களை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை திணைக்­களம் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது என அஞ்சல், அஞ்சல் சேவை­கள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

பெரும்­பான்மை இனத்­த­வர்கள் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை களை­வ­தற்கு அமைச்சு முன்­னெ­டுத்­து­வரும் செயற்­றிட்­டங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் குத்பா பிர­சங்­கங்கள் காலத்­துக்­கேற்ற வகையில் அமைய வேண்டும். போதைப் பொரு­ளினால் ஏற்­படும் ஆபத்து, சீர­ழி­வுகள் மற்றும் நல்­லி­ணக்கம், இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தல் போன்ற தலைப்­பு­களில் குத்பா பிர­சங்­கங்கள் அமை­வது அவ­சி­ய­மாகும்.

பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்கள் இன்­றைய கால கட்­டத்தில் செயற்றிறன் மிக்க செயற்­பா­டு­களில் ஈடு­பட வேண்டும். நோன்பு காலத்தில் கஞ்சி பகிர்ந்­த­ளிப்­பது போன்ற விட­யங்­களை விட சமூ­கத்தை நல்­வ­ழிப்­ப­டுத்தும் செயற்­றிட்­டங்கள் இன்று அவ­சி­ய­மா­க­வுள்­ளன. பெரும்­பான்­மை­யி­னத்­த­வரின் அநேக செயற்பாடுகள் பன்சலைகளை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. பள்ளிவாசல்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.