வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளை ஐ.தே.க. எதிர்க்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

0 625

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னரும், அவர் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைத் தாக்கும் வகை­யி­லான கருத்­துக்­க­ளையே கூறி­வ­ரு­கின்றார்.

எனவே எதிர்­வரும் 5ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு –- செலவுத் திட்­டத்தில் ஜனா­தி­பதி செய­லகம், அவ­ரது அமைச்சு என்­ப­வற்­றுக்­கான நிதி ஒதுக்­கீட்­டிற்கு நாங்கள் எதி­ராக வாக்­க­ளிப்­போ­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­திற்­கான வரவு- –செல­வுத்­திட்டம் எதிர்­வரும் 5ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றினை நேற்று முன்­தினம் தனது அலு­வ­ல­கத்தில் ஏற்­பாடு செய்து, அங்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாங்கள் ஒன்­றி­ணைந்தே பத­வியில் அமர்த்­தினோம். அவ­ருடன் இணைந்து அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுத்­த­துடன், நாட்டில் பல்­வேறு மாற்­றங்­க­ளையும் மேற்­கொண்­டி­ருக்­கின்றோம்.

ஆனாலும் கடந்த ஒக்­டோபர் மாதம் எமக்கும், அவ­ருக்கும் எதி­ராக இருந்த அர­சியல் அணி­யுடன் இணைந்து இந்­நாட்டில் அர­சியல் மாற்­ற­மொன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­யினை மேற்­கொண்டார். ஆனால் அந்த முயற்சி நீதி­மன்­றத்தால் தோற்­க­டிக்­கப்­பட்­ட­துடன், நாங்கள் மீண்டும் எம்­மு­டைய அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம்.

ஆனாலும் ஜனா­தி­பதி தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஐக்­கிய தேசிய முன்­னணி மற்றும் அதன் தலை­வர்­களை தாக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டு வரு­கின்றார். எனவே எதிர்­வரும் 5ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு–செல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி செய­லகம், ஜனா­தி­ப­தியின் அமைச்சு உள்­ளிட்­ட­வற்­றுக்­கான நிதி ஒதுக்­கீட்­டிற்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. ஜனா­தி­பதி தற்­போது புதி­தாக இணைந்து கொண்­டுள்ள அர­சியல் அணி­யி­னரின் வாக்­கு­க­ளைப்­பெற்று அதனை நிறை­வேற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கலாம்.

வரவு–செல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் தொடர்­பு­டைய ஒதுக்­கீ­டு­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் இருக்­கின்றார்.

தற்­போது எம்­மு­டைய நிலைப்­பா­டாக இருக்­கின்ற போதிலும், விரைவில் இது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக மாறும். கடந்த காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி அதிகளவில் தாக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றார். எனவே அவரும் எம்முடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.