நிர்மாண திருத்த வேலைகள்: பள்ளிவாசல்களின் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

0 591

பள்­ளி­வா­சல்­களின் திருத்­த­வே­லை­க­ளுக்கும், நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கும், புதிய பள்­ளி­வா­சல்கள் அமைப்­ப­தற்கும் நிதி­யு­த­விகள் பெற்­றுக்­கொள்­வதில் பள்­ளி­வாசல் தலை­வர்கள் மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும். நாட்டின் சட்­டங்­க­ளுக்கு விரோ­த­மா­கவும், இஸ்லாம் அங்­கீ­க­ரிக்­காத தொழில்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். புதிய பள்­ளி­வா­சல்­களின் நிர்­மாணம் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்­க­ளிடம் இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­த­தாகக் குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; புதிய பள்­ளி­வா­சல்கள் நிறு­வப்­ப­டும்­போதும், புதிய நிர்­மா­ணப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போதும் அதற்­கான நிதி­களை யாரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்­பதில் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்­க­ளுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

நாட்டில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­துக்கும் மேல­தி­க­மான விகி­தா­சா­ரத்தில் குற்­றச்­செயல் புரி­ப­வர்­களும், இஸ்லாம் அங்­கீ­க­ரிக்­காத தொழில்­களில், வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். இவர்­களின்  நிதி­யு­த­விகள் பள்­ளி­வா­சல்­களில் உள்­வாங்­கப்­படக் கூடாது. சட்டவிரோத நட­வ­டிக்­கைகள் மூலம் பணம் ஈட்­டு­ப­வர்கள் சமூ­கத்­தி­லி­ருந்தும் ஓரங்கட்­டப்­ப­ட­ வேண்டும். சமூகம் அவ்­வா­ற­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிதி­யு­தவி பெற்­றுக்­கொள்­வதை நிரா­க­ரிக்க வேண்டும்.

இதே­வேளை, பள்­ளி­வா­சல்­களை நிர்­வா­கிப்­ப­தற்கு தெரி­வு­செய்­யப்­ப­டு­வோரும் சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது. இன்று பல பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை அங்­கத்­த­வர்கள், தலை­வர்கள் தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவ்­வா­றான நிர்­வாக சபை­களை சீர­மைக்கும் நட­வ­டிக்­கை­களில் வக்புசபை ஈடுபட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகங்கள் ஊழல்களின்றி, இறைபக்தியுடன் செயற்பட்டாலே சிறந்ததோர் சமூகத்தை ஒவ்வோர் பகுதிகளிலும் கட்டியெழுப்பமுடியும். வக்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் இவற்றினை மையமாகக் கொண்டே உள்வாங்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.